டி.என்.பி.சி.புதிய கட்டிடம் :முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

Thu, 09/27/2012 - 16:20 -- Reporter

 சென்னை

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  இன்று (27.9.2012) சென்னை, வ.உ.சி. நகர், ப்ரேஸர் பாலச் சாலையில், 19 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய புதிய கட்டடத்தினை திறந்து வைத்தார்

தமிழக அரசின் பல்வேறு
பணிகளுக்கு திறமையானவர்களை போட்டித்
தேர்வுகள் மூலம் தெரிந்தெடுக்கும் சீரிய பணியினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது சென்னை, கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள வணிகவரித் துறை இணைப்புக் கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விண்ணப்பதாரர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பாரிமுனை பேருந்து நிலையம் அருகிலுள்ள வ.உ.சி. நகர், ப்ரேஸர் பாலச் சாலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய கட்டடத்தினை கட்டுவதற்கு தமிழக அரசு  அனுமதி அளித்திருந்தது.

அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் கட்டடம் 1,25,000 சதுர அடி பரப்பளவில் ஆறு தளங்களாக கட்டப்பட்டுள்ளது. ஒலி-ஒளி காட்சி அமைப்பு வசதி, காணொலிக் காட்சி வசதி, பெரிய மற்றும் சிறிய அளவிலான இரண்டு மாநாட்டுக் கூடங்கள், இணையவழித் தேர்வுக்கூடம், நவீன வசதிகளுடன் கூடிய நேர்காணல் அறைகள், தகவல் மற்றும் குறை தீர் மையம், அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய மதிப்பீட்டு அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 19 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் புதிய கட்டடத்தினை   தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா  இன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்

மேலும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இப்புதிய கட்டடத்தின் ஆறாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டுக் கூடத்தினையும், தேர்வுக் கூடத்தினையும் பார்வையிட்டு அங்கே அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினையும் கண்னுற்றார்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Undefined

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.