கரூரில்அணையில் மூழ்கி 4 பேர் பலி

Thu, 10/04/2012 - 00:20 -- Reporter
கரூர்: 
அணையில் குளிக்க சென்ற 4 பேர் பரிதாபமாக பலியானார்கள். கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே அணைப்பாளையம் அணை கட்டப்பட்டுள்ளது. 
இந்த அணையில் குளிப்பதற்காக எல் ஆர் ஜி நகரை சேர்ந்த மிட்டாய் வியாபாரி பாலசுப்ரமணியம், மனைவி பாக்யலட்சுமி, மகள்கள் காயத்ரி(16), சுவாதி(14), உறவினர் மகன் ராம்குமார், பாலசுப்ரமணியத்தின் சகோதரர் வெங்கடேஷ் என்பவரது மகள் கவுசிகா(12) ஆகியோர் மாருதி காரில் சென்றனர். 
அணையில் குளித்துமுடித்த பின்னர், ராம்குமார் என்பவர், தனது துணிகளை அலசுவதற்காக மீண்டும் அணைக்கு சென்றார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் அங்கு வழுக்கி அணையில் விழுந்து பலியானார். இவரை காப்பாற்ற சென்ற பாக்யலட்சுமி, காயத்ரி, சுவாதி ஆகியோரும் அணையில் மூழ்கி பலியானார்கள். இவர்களது உடலை தீயணைப்புப் படை போலீசார் மீட்டனர். 
Undefined

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.