ஜெயலலிதாவுக்கு நன்றி:கருணாநிதி

Fri, 10/05/2012 - 16:58 -- Reporter

சென்னை

தமிழகம் முழுவதும் துண்டறிக்கை போராட்டம் நடத்த வழிவகுத்த ஜெயலலிதாவுக்கு, திமுக தலைவர் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார்.

கருப்புச் சட்டை அணிந்து துண்டு
பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை இன்று காலை திமுக தலைவர் கருணாநிதி துவக்கி வைத்து உரையாற்றினார்.

தமிழகம் மின்னொளி இல்லாமல் இருண்டுள்ள சூழ்நிலையிலும், விலைவாசி உயர்வும், சட்டம் -ஒழுங்கு சீர்கேடும், பத்திரிகை சுதந்திரத்தையே அடக்குகின்ற அவலத்தை கண்டிக்க அறவழியில் நடத்தவிருந்த மனித சங்கிலிப் போராட்டத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை. ஏனென்றால் அவர்கள் அனுமதி கொடுத்திருந்தால், சென்னையிலே ஒரு இடத்திலே மட்டும் அணி வகுப்பு நடந்திருக்கும். அதைப் போல திருச்சியிலே, சேலத்திலே, மதுரையிலே, கோவையிலே என்று ஒவ்வொரு இடத்திலே தான் கருப்பு உடை அணிந்து நாம் நடத்தவிருந்த அணி வகுப்பு நடந்திருக்கும். என்னமோ தெரியவில்லை, ஜெயலலிதாவுக்கு நம்மீது ஓர் அன்பு. இவர்களுடைய கிளர்ச்சி ஒரு இடத்தோடு நின்று விடக் கூடாது, தமிழ்நாட்டிலே பரவலாக நடைபெற வேண்டுமென்று எண்ணினாரோ என்னவோ தெரியவில்லை. அவர்கள் அனுமதி மறுத்து விட்டார்கள். அனுமதி மறுத்த காரணத்தால் நேற்று முன் தினம் இரவு 12 மணியளவில் தலைமைக் கழகத்திலே கூடி எடுத்த முடிவின்படி, அனுமதி தராவிட்டாலும் பரவாயில்லை, ஆங்காங்கு நம்முடைய கழகத் தோழர்கள் உரிய முறையில் அற வழியில் கருப்பு உடை அணிந்து இந்த அரசைப் பற்றிய குற்றம் குறைகளை, மக்களின் கொதிப்பை இன்றைக்கு தமிழ்நாடே இருண்ட கண்டமாக மாறியிருக்கின்ற நிலையை எடுத்துக்காட்ட ஆங்காங்கு துண்டறிக்கைகளை எழுதியோ, அச்சிட்டோ பொது மக்களுக்கு வழங்குகின்ற ஒரு செயலில் ஈடுபட்டு நடத்துங்கள் என்று நான் விடுத்த அழைப்பையேற்று தமிழ்நாடு முழுதும் எல்லா இடங்களிலும் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் இந்தத் துண்டறிக்கை விநியோகம் நடைபெறுகிறது.

இதற்காக நான் எங்களுடைய போராட்டத்தைத் தடுத்து, இந்த வழியிலே போராடுகின்ற ஒரு நிலையை ஏற்படுத்திய ஜெயலலிதாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, நீங்கள் இந்த நிகழ்ச்சியை அமைதியோடு நடத்திக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Undefined

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.