டெங்கு காய்ச்சலைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்.

Fri, 10/19/2012 - 03:45 -- Reporter

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்
தமிழ்நாடு மாநிலக் குழு
18/19, தண்டபாணி தெரு, தி.நகர், சென்னை - 600 017.

நாள்: 18.10.2012

பத்திரிக்கை செய்தி

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் இரா.திருமலை வெளியிடும் அறிக்கை:

டெங்கு காய்ச்சலைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.  கழிவு நீர்க் கால்வாய்கள் அடைப்பு, பிளாஸ்டிக் குப்பைகள், சாலைகளில் ஏற்படும் சகதிகள், குட்டைகள் போன்றவைகளே இதற்குக் காரணங்களாக இருக்கின்றன.  மொத்தத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையே முதன்மையான காரணமாகும்.  மேலும், டெங்கு காய்ச்சலை அறியும் பரிசோதனைக் கூடங்கள் எல்லா மருத்துவமனைகளிலும் இருப்பதில்லை.  மருத்துவர்கள், மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன.  தனியார் மருத்துவமனைகளில் இதை வியாபாரமாக்கி இலாபம் சம்பாதிக்கின்றனர்.  தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.  சுற்றுச்சூழல் சீர்கேடுகளை உடனடியாகக் களைய வேண்டும்.  அனைத்து மருத்துவமனைகளிலும், டெங்கு காய்ச்சல் பரிசோதனைக் கூடங்களைத் திறக்க வேண்டும், போதிய மருந்து பொருட்களை வழங்கிட வேண்டும்.  அரசு மருத்துவமனைகளில் சுத்தத்தைப் பராமரிக்க வேண்டும்.  தமிழக அரசு இவற்றை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23.10.2012 செவ்வாய் அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், தமிழ்நாடு மாநிலக்குழு அறைக்கூவல் விடுக்கின்றது.  அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகரப் பகுதிகளில் நடைபெறுகின்ற பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இரா. திருமலை
மாநில செயலாளர்
   செல்: 99442 24935
Undefined

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.