மருத்துவ காப்பீடு திட்டத்தில் கூடுதல் செலவினை அரசு ஏற்கும்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Fri, 11/02/2012 - 16:41 -- Reporter

சென்னைதமிழக முதல்வர் ஜெயலலிதா பேரவையில் அறிவித்தாவது.மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்குவதற்கும்; உயிர் காக்கும் உயர் ரக மருந்துகள் வாங்குவதற்கும்; ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட 284 கோடி

ரூபாய் இல்லாமல், உயிர் காக்கும் சிறப்பு மருந்துகள் வாங்க கூடுதலாக 10 கோடி ரூபாய் நிதியினை நான் ஒதுக்கியுள்ளேன்         தரமான மருத்துவச் சேவையை தமிழக மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், ""முதலமைச்சரின் விரிவான  மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்"" 11.1.2012 அன்று என்னால்  தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் 1,016 வகையான சிகிச்சை முறைகளும்; 23  முக்கிய பரிசோதனைகளும்; 113 தொடர் சிகிச்சை முறைகளும் அடங்கும். இத்திட்டத்தின் கீழ், ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட 77 நோய்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை  சிகிச்சை  மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.  சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும் காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும். இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ், 1,64,365  பயனாளிகளுக்கு  384 கோடி ரூபாய்  காப்பீட்டு நிறுவனத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

        இருப்பினும், கல்லீரல்  மாற்று அறுவை சிகிச்சை,  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மருந்துகள்,   எலும்பு மஜ்iஐ மாற்று அறுவை  சிகிச்சை, காது நுண் எலும்பு கருவி பொருத்தும் சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை, ஆகிய சிகிச்சைகளை மேற்கொள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக  செலவு ஆகிறது என்பதால் இந்த கூடுதல் செலவினத்தை, ஏழை எளிய  நோயாளிகளே ஏற்கும் நிலைமை  உள்ளது என்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இத்தகைய ஏழை, எளிய நோயாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு, அனுமதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக ஏற்படும் கூடுதல் செலவினத்தையும் அரசே ஏற்கும்  வகையில்  ஒரு சிறப்பு தொகுப்பு நிதி,  ஒன்று உருவாக்கப்படும். இந்த சிறப்பு தொகுப்பு நிதிக்கு முதற்கட்டமாக

10 கோடி ரூபாய் நிதி  வழங்கப்படும் என்பதையும்; இனிவரும் காலங்களில் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் காப்பீட்டு தொகையிலிருந்து இந்த சிறப்பு தொகுப்பு நிதிக்காக ஆண்டொன்றிற்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்

 

Undefined
Topic: 

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.