கரும்பு கொள்முதல் விலையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்

Tue, 11/20/2012 - 04:30 -- Reporter

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

கரும்பு கொள்முதல் விலையை ரூ.3 ஆயிμமாக உயர்த்த வேண்டும்

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள கரும்பு ஆலைகளில் கரும்பு அரவை தொடங்கிவிட்ட போதிலும், தமிழகத்தில் நடப்பு பருவத்திற்கான கரும்பு கொள்முதல் விலை இதுவரை அறிவிக்கப் படவில்லை. தங்களது கரும்புக்கு எவ்வளவு விலை கிடைக்கும் என்பது கூட தெரியாத நிலையில் விவசாயிகள் சக்கரைஆலைகளுக்கு கரும்பு வழங்கவேண்டிய அவல நிலை தமிழகத்தில் காணப்படுகிறது.

கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அதிமுக ஆட்சிக்கு வந்தால் கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதை முதலமைசர் ஜெயலலிதா நிறை@வற்றுவார் என்று உழவர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், கடந்த ஆண்டு கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு வெறும் 100 ரூபாய் உயர்த்தப்பட்டது. எனவே, நடப்பாண்டிலாவது கரும்பு விலை கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.கரும்பு சாகுபடிக்கு தேவையான உரத்தின் விலை மூன்று மடங்கு வரை உயர்ந்திருக்கிறது. விவசாயத்தொழிலாளர்களுக்கான கூலியும் பெருமளவில் அதிகரித்திருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த ஆண்டிற்கான கரும்பு கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசு கரும்பு கொள்முதல் விலையை 17 விழுக்காடு உயர்த்தியிருக்கிறது. உத்தர்கான்ட் மாநிலத்தில் கரும்பு விலை டன்னுக்கு ரூ.2750ஆக நிர்ணயிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உத்தரபிரதேசம் , பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் கரும்புக்கு நல்ல விலை வழங்கும்படி மாநில அரசுகலுக்கு விலை நிர்ணயக் குழு பரிந்துரைத்திருக்கிறது.

உழவர்களின் நலனைக் காப்பதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் ஜெயலலிதா, அதை நிரூபிக்கும் வகையில் தமிழகத்தில் கரும்புக்கு அதிகவிலை வழங்க வேண்டும். நடப்பாண்டில் மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடு , போதிய தொழிலாளர்கள் இல்லாமை என பல்வேறு சிரமங்களுக்கிடையே விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்திருக்கிறார்கள்.இதைக் கருத்தில் கொண்டு நடப்பாண்டில் ஒரு டன் கரும்புக்கு குறைந்தது ரூ. 3000 கொள்முதல் விலையாக வழங்க@வண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தங்கள் அன்புள்ள, (மருத்துவர் ச. இராமதாசு)

Undefined
Topic: 

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Lines and paragraphs break automatically.