2012

காவிரி கண்காணிப்புக்குழு கூட்டம்!

வெள், 12/07/2012 - 19:26 -- Puthiyavan

மத்திய நீர்வளத்துறை செயலரும் , காவிரி கண்காணிப்புக் குழுவின் தலைவருமான த்ருவ் விஜய் சிங் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் காவிரி கண்காணிப்புக்குழுவின் கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச்செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, இ.ஆ.ப, பொதுப்பணித்துறை செயலர் டாக்டர். எம்.சாய் குமார், இ.ஆ.ப, காவிரி தொழில்நுட்ப குழுமத்தின் (Cauvery Technical Cell) தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் தமிழக அரசின் சார்பில் கலந்துகொண்டனர்.

தமிழ்

How police evicted Kejriwal!

வெள், 12/07/2012 - 18:16 -- Puthiyavan

AAP leader Arvind Kejriwal and several other people were detained from outside Chief Minister Sheila Dikshit's residence today during their protest against demolition of buildings in a south Delhi locality. Over 100 people had gathered outside Dikshit's 3-Motilal Nehru Marg residence at 7 AM to protest demolition of their houses in Shaheenbagh near Okhla and demanded an audience with her. Kejriwal joined them an hour later. The protesters continued their demonstration outside the Chief Minister's residence but police detained them around 12:30 PM as they refused to leave the place.

ஆங்கிலம்

கெஜ்ரிவால் வெளியேற்றபட்ட காட்சி!

வெள், 12/07/2012 - 18:13 -- Puthiyavan

AAP தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல பொதுமக்கள், தெற்கு தில்லி வட்டாரத்தில் உள்ள கட்டிடங்கள் இடிப்புக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை காட்டியபோது , முதல்வர் ஷீலா தீட்சித் வீட்டிற்கு வெளியே இன்று கைது செய்யப்பட்டனர். 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அருகில் ஷாஹின்பாக் வட்டாரத்தில் உள்ள தங்கள் வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலை 7 மணி முதலே எண் 3 ,மோதிலால் நேரு மார்க் குடியிருப்பில் உள்ள தீட்சித் வீட்டிற்கு வெளியே கூடி அவரிடம் பேசவேண்டும் என கோரினர். கெஜ்ரிவால் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அங்கு வந்து சேர்ந்தார். எதிர்ப்பாளர்கள் முதல்வர் வீட்டிற்கு வெளியே தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அவர்கள் இடத்தை விட்டு நகர மறுக்கவும்,காவல்துறையினர் மதியம் 12:30 மணிக்கு அவர்களை கைது செய்தனர்.

தமிழ்

Madras HC reserves orders on the Writ Petition challenging appointment of Ranjit Sinha as CBI Director

வெள், 12/07/2012 - 17:16 -- Puthiyavan
Undefined

Madras HC reserves orders on the Writ Petition challenging appointment of Ranjit Sinha as CBI Director

விஸ்வரூபம் - பிரச்னைகளே விஸ்வரூபம்!

வெள், 12/07/2012 - 16:44 -- Puthiyavan

கமல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் `விஸ்வரூபம்` திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவான படம் என்பதால், அதை சந்தைப்படுத்துவதில் கமலுக்கு சிக்கல். அந்த சிக்கலின் விளைவாக தொலைக்காட்சி நேரடி சேவையில் இயங்கும் டி.டீ.எச் தொழில்நுட்பத்தில் படத்தை திரையரங்கில் திரையிடப்படுவதற்கு 8 மணிநேரம் முன்பு ஒருமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார் என்ற தகவல் திரைப்பட விநியோகிஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

தமிழ்

கொடிநாள் கொண்டாட்டம்!

வெள், 12/07/2012 - 14:30 -- Puthiyavan

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (7.12.2012) தலைமைச் செயலகத்தில், கொடிநாளை முன்னிட்டு முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை, கல்வி உதவித் தொகை, முன்னாள் படைவீரர்களின் மகள்களுக்கு திருமண உதவித் தொகை, படைப்பணியில் உயிர் துறந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு உதவித்தொகை, போற்றத்தக்க பணி புரிந்தமைக்கான பதக்கம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த படைவீரர்களுக்கு உயர்த்தப்பட்ட பணப்பயன்கள் ஆகியவற்றை வழங்கினார்கள்.

தமிழ்

சுனாமி எச்சரிக்கை

வெள், 12/07/2012 - 14:22 -- Puthiyavan
தமிழ்

ரிக்டர் அளவில் 7.1 அளவிடும் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, ஜப்பான் நாடு 1 மீட்டர் வரை சுனாமி அலைகளின் எச்சரிக்கை விடுத்துள்ளது

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு

வெள், 12/07/2012 - 14:09 -- Puthiyavan
தமிழ்

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு வரும் 17, 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

கோவை மாவட்ட தொழில் நிர்வாகிகள் , தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலைமை குறித்து முதல்வருடன் ஆலோசனை

வெள், 12/07/2012 - 13:41 -- Puthiyavan

கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், தென்னிந்திய ஆலைகள் சங்கம், தமிழ்நாடு காகிதம் மற்றும் அட்டை ஆலைகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று (7.12.2012) தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்தார்கள்.

தமிழ்

பக்கங்கள்