புதிய கருத்தை சேர்

அன்னிய நேரடி முதலீட்டினால் பெரும் பலன்: மன்மோகன் சிங்.

ஞாயி, 11/04/2012 - 20:50 -- Reporter
புதுடெல்லி.


சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு, நாட்டின் சாதாரண மக்களுக்கு பெரும் பலன் கிடைக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங்.கூறியுள்ளார்.


மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டால் ஏற்படும் விளைவுகள் போன்றவை குறித்து விளக்குவதற்காக தில்லியில் காங்கிரஸ் கட்சி இன்று பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.அதன்படி, இன்று காலை தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் பேரணியை, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் துவக்கி வைத்தனர். , ராகுல் இந்தப் பேரணியில் முக்கிய இடம் பெற்றார். இந்தப் பேரணியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் வளர்ச்சிக்காகவே பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சமுதாயத்தில் அனைவரும் அனைத்தும் பெற வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு எனும் அரசின் கொள்கையால், சாதாரண மக்களுக்கு பெரும் பலன் கிடைக்கும் என்றும் பேசினார் பிரதமர் மன்மோகன் சிங்.பேரணியை ஒட்டி நடைபெற்ற இந்த்க் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.பி.,க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
Undefined
Topic: 

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்