புதிய கருத்தை சேர்

வேட்டவலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தேசிய மின் சிக்கன வார விழா

சனி, 12/15/2012 - 08:41 -- Puthiyavan

வேட்டவலம் டிச. 15:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,வேட்டவலம்  உட்கோட்டம் சார்பில் தேசிய மின் சிக்கன வார விழா விழிப்புண்ர்வு பயிலரங்கம் வேட்டவலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் வளாக அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மல்லிகா, பாலமுருகன், ஆகியோர் தலைமை தாங்கினார்.வேட்டவலம் இளநிலை பொறியாளர் சங்கர் முன்னிலை வகித்தார். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பாபு. இராதாகிருஷ்ணன் வரவேற்றார். இராஜந்தாங்கள் உதவி செயற்பொறியாளர் ராமநாதன், ஆவூர் உதவி மின் பொறியாளர் செந்தில்குமார், மற்றும் ஆசிரியர்கள் எழுமலை, சம்பத், கருணாகரன்,எழுமலை,எகவள்ளி, ஆகியோர் தேசிய மின் சிக்கன வார விழா கொண்டப்படுவதின் அவசியம் குறித்தும். மாணவர்கள் எவ்வாறு எல்லாம் மின்சிக்கனத்தை கையால வேண்டும்  என்பது குறித்தும் பேசினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவ மாணவிகள்,ஆசிரியர்கள,மற்றும் மின் வாரிய பணியாளர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார். 

தமிழ்
Tags: 

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்