புதிய கருத்தை சேர்

இசையின் இசை : சென்னையில் தமிழ்ப் பண்ணிசைப் பெருவிழா

வெள், 12/21/2012 - 11:02 -- Erodekaaran
தமிழ்

பொங்கு தமிழ்ப் பண்ணிசை மணிமன்ற பொதுச்செயலாளர் ஜி.கே. மணி அறிக்கை

‘இனிய உளவாக இன்னாத கூறல்’ என்பதைப்போல இசை வளமும், மொழிச்செழிப்பும் 

நிறைந்த தமிழிசையை விட்டுவிட்டு, மேற்கத்திய இசை , கலப்பிசை ஆகியவற்றை நாடும் 
கவலைக்குரிய போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த பண்பாட்டுச் சீரழிவைத் தடுத்து 
தமிழ்ப் பண்ணிசையை பரப்பும் பணியை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட 
பொங்கு தமிழ்ப் பண்ணிசை மணிமன்றம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
சிங்கப்பூர், மலேஷியா , தில்லி, மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் என தமிழர்கள்
வாழுமிடமெல்லாம் தமிழையும், தமிழ்ப் பண்ணிசையையும் பரப்பி வரும் பண்ணிசை மணிமன்றம்,
பத்தாம் ஆண்டு பண்ணிசைப் பெருவிழாவை வரும் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் சென்னையில்
நடத்துகிறது. 
 
 
உலகமெல்லாம் தமிழைப் பரப்பி வரும் மக்கள் தொலைக்காட்சியுடன் இணைந்து
நடத்தப்படும் இந்த ஆண்டு தமிழிசை விழாவிற்கு ‘இசையின் இசை’ என்று பெயரிடப்
பட்டிருக்கிறது.வரும் 22ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை தியாகரயர் நகர் சிவாஜி கணேசன்
சாலையிலுள்ள முருகன் திருமண அரங்கில் இந்த இசைவிழாவை மணிமன்றத்தின் நிறுவனர்
மருத்துவர் அய்யா தலைமையில் சீர்காழி கோ. சிவ சிதம்பரம் அவர்கள் தொடக்கி வைத்து சிறப்புறை 
ஆற்றுகிறார். பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி அவர்கள் அறிமுக உரை 
நிகழ்த்துகிறார். மணிமன்றத்தின் பொதுச்செயலாளர் கோ.க. மணி வரவேற்புறையாற்றுகிறார். தொடர்ந்து
மணிமேகலை, முக்கூடற்பள்ளு ஆகிய இலக்கியங்களின் ஒலி வடிவிலான குறுந்தகடுகள்
வெளியிடப்படவுள்ளன. 
 
தமிழ்ப் பண்ணிசைக்கு நீண்ட காலமாக தொண்டாற்றிவரும் பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் 
அவர்களுக்கு ‘தமிழ்ப் பண்ணிசை மாமணி’விருதை மருத்துவர் அய்யா அவர்கள்
வழங்கி பாரட்டிப்பேசுவார். 
 
பின்னர் தித்திக்கும் திருமறை என்ற தலைப்பில் @பேராசிரியர் மா.வயித்தியலிங்கன், 
பெரும்பாண நம்பி மா. கோடிலிங்கம் ஆகியோர் இசையமுது வழங்குகின்றனர்.
 
காவடிச்சிந்து, தமிழிசைக் கலம்பகம் ஆகிய தலைப்புகளிலும் தமிழிசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
தொடர்ந்து திசம்பர் 23ஆம் தேதி மாலையில் ராகங்களின் வளர்ச்சி, குரலிசையும் குழலிசையும்,
பண்ணிசை சங்கமம், தமிழ்ப் பண்ணில் நாட்டியம் ஆகிய தலைப்புகளில் ஆய்வுறை, இசை மற்றும்
நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இரு நாட்கள் நடைபெறவிருக்கும் ‘இசையின் இசை’
நிகழ்ச்சியின் நிறைவில் முன்னாள் தொடர்வண்டித்துறை அமைச்சர் அ.கி. மூர்த்தி
நன்றியுøμயாற்றுகிறார். 
 
தமிழ்நாட்டில் தமிழிசை ஒலிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்
நடத்தப்படவிருக்கும் இந்த இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தமிழையும் , இசையையும் வளர்க்கும் நோக்குடன் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு நுழைவுக் கட்டணம்
எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags: 
Topic: 

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்