புதிய கருத்தை சேர்

பொங்கல் சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு: 15 சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறப்பு

வெள், 01/10/2014 - 12:19 -- Velayutham
Undefined
 
 
பொங்கல் சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு: 15 சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறப்பு
 
கோயம்பேடு, ஜன 10–
 
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லக் கூடியவர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் செய்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
 
சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், முக்கிய நகரங்களுக்கும், பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் 6514 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். சிறப்பு பஸ்கள் இன்று (10–ந்தேதி) முதல் 19–ந்தேதி வரை இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இன்று 600 சிறப்பு பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு புறப்பட்டு செல்கின்றன.
 
நாளை (11–ந்தேதி) 1325 சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன. சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது. வழக்கமாக கோயம்பேட்டில் 10 டிக்கெட் கவுண்டர்கள் செயல்படுகின்றன.
 
பொங்கல் பண்டிகை சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு செய்வதற்காக கூடுதலாக 15 டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்காமல் விரைவாக முன்பதிவு செய்யும் வகையில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டன.
 
இதனை போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து பொது மக்கள் சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு செய்தனர். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட அதிக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். ரெயிலில் இடம் கிடைக்காதவர்கள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அரசு சிறப்பு பஸ்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
 
சென்னையில் பல்வேறு இடங்களில் பணிபுரிவோர், கூலி வேலை செய்பவர்களுக்கு சிறப்பு பஸ்கள் மிகவும் பயன் உள்ளதாக அமைகிறது.
 
சிறப்பு பஸ்களில் கூட்டம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல பண்டிகை முடிந்து பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 17, 18, 19 தேதிகளில் திரும்புவதால் அன்றைய தினங்களில் சிறப்பு பஸ்களில் கூட்டம் அலைமோதும்.
 
பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள கோயம்பேடு பஸ் நிலையத்தில் போக்குவரத்து கழக அதிகாரிகள் அனைத்து வசதிகளையும் செய்துள்ளனர். ஒலி பெருக்கி மூலம் தகவல்கள் அறிவிக்கப்பட உள்ளன. பயணிகள் எந்த பஸ்சில் பயணம் செய்ய வேண்டுமோ அதற்கான தடம் எண், புறப்படும் இடம் போன்றவற்றை அவ்வப்போது தெரிவிப்பார்கள்.
 

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்