புதிய கருத்தை சேர்

அரசு ஊழியர்களின் காப்பீடு திட்டத்தில் பன்நோக்கு நவீன சிறப்பு அரசு மருத்துவமனை சேர்ப்பு

வியா, 11/20/2014 - 22:36 -- Velayutham
Undefined
 
அரசு ஊழியர்களின் காப்பீடு திட்டத்தில் பன்நோக்கு நவீன சிறப்பு அரசு
மருத்துவமனையும் சேர்ந்து அரசு உத்தரவிட்டுள்ளது.
 
தமிழக அரசு ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ
காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. யுனைடெட் இந்தியா
நிறுவனத்தின் மூலமாக இது செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்படி ரூ.4 லட்சம் அளவில் மருத்துவக் காப்பீட்டு வசதியைப் பெறலாம்.
எந்தெந்த மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றால், காப்பீட்டு வசதியைப்
பெறலாம் என்பதற்கான பட்டியலை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. ஏற்கனவே
நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள்  இருக்கும் நிலையில்,
பில்ரோத், காவேரி, விஜயா ஆஸ்பத்திரிகள் உட்பட கூடுதலாக 22
மருத்துவமனைகளின்  பட்டியலை  அரசு சேர்த்துள்ளது.
இந்தப் பட்டியலில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள பன்நோக்கு நவீன
சிறப்பு அரசு மருத்துவமனையும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்