புதிய கருத்தை சேர்

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதிமுக வெற்றி பெறும்.மக்கள் ஆய்வகம் கருத்து கணிப்பு.

சனி, 11/22/2014 - 18:27 -- Velayutham
Undefined
தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதிமுக வெற்றி பெறும்.மக்கள் ஆய்வகம் கருத்து கணிப்பு.
சென்னை நவ 22.
 
தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதிமுக வெற்றி பெறும் என்று மக்கள் ஆய்வகம் தனது கருத்து
கணிப்பில் தெரிவித்துள்ளது.
இது குறித்து மக்கள் ஆய்வகத்தை சேர்ந்த போராசிரியர்கள் ராஜநாயகம்,ராஜூ ஆகியோர் சென்னையில்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
எங்கள் அமைப்பின் சார்பில் ஜெயலலிதா ஆட்சியில் இல்லாத தமிழகம்,ஆறு மாத மோடி அரசு,திருவரங்கள்
இடைத்தேர்தல் குறித்து தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும்,நவம்பர் 7 முதல் 20 தேதி
வரை 3320 பேரிடமும்,திருவங்கத்தில் 1530 பேரிடமும் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன.இதில் கடந்த
நாடளுமன்ற தேர்தலில் தமிழக அளவில் அதிமுக பெரும் வெற்றி பெற்றது எதிர்பார்ததுதான் என்று 42 சதவீதம்
பேர் கருத்தும் இதற்க்கு முக்கிய காரணம் பல்வேறு  நலதிட்டங்களை செயல்படுத்தியது என்று 28 சதவீதத்தினர்
தெரிவித்துள்ளனர்.
எதிர்பார்த்ததைவிடக் கடுமையாக தண்டனை அளிக்கப்பட்டது என்று 53 சதவீதத்தினரின் கருத்தாக உள்ளது.
உயர் மற்றும் உச்சநீதிமன்ற மேல்முறையீடுகளுக்கு பிறகு இந்த வழக்கில் இருந்து வழக்கு தள்ளுபடியாகி
ஜெயலலிதா விடுதலை பெற்று மீண்டும் முதல்வராவார் என்று 30 சதவீதத்தினர் உறுதியாக தங்களுடைய கருத்தை
பதிவு செய்துள்ளனர்.
அடுத்து தற்போது உள்ள சூழ்நிலை தொடந்தால் தமிழக தேர்தல் களத்தில் ஜெயலலிதா மீது அனுதாபம்
அதிகமாகி அது அதிமுகவின் வெற்றிக்கு முக்கிய பங்காக அமையும் என்று 31 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.
தற்போது உள்ள நிலையில் தமிழக சட்டமன்றத்திற்க்கு முன்கூட்டியே தேர்தல் வருவதற்க்கு வாய்ப்புகள் அதிகமாக
உள்ளது என்றும் இந்த தேர்தல் அதிமுகவுக்கு சாதகமாக அமையும் என்று 44 சதவீதத்தினர்
தெரிவித்துள்ளனர்.அதிமுக அரசின் ஒட்டுமொத்தச் செயல்திறன் 58 சதவீதம் சிறப்பாக உள்ளது என்று மக்கள்
தங்களின் எண்ணத்தை வெளிபடுத்தியுள்ளனர்.
இன்றைய நிலையில்  நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்க்கு தேவை இருப்பதாக தெரியவில்லை என்று அழுத்தமாகப்
71 சதவீதத்தினர் கருத்தை பதிவு செய்துள்ளனர்.தற்போதைய அரசியல் பின்னணியில்  தமிழக அளவில் இன்று
வாக்களிப்பதாக இருந்தால் அதிமுகவுக்கு 43 சதவீதம்,திமுகவுக்கு 26,பாஜகவுக்கு 9 .தேமுதிக 3.சதவீதம்
வாக்கு பதிவாகும் என்று கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
மத்தியில்  மோடி தலையிலான பாஜக அரசின் செயல்பாடுகளைப் பொதுவாக விமர்சன நோக்கில் பார்க்கும்
போக்கே தமிழக மக்களிடம் மேலோங்கியுள்ளது.
திருவங்கம் தொகுதியில் இடைதேர்தல் வந்தால் கடந்த தேர்தலைப் போல பலமுனைப்போட்டியில் கட்சிகள்
களமிறங்கினால் முடிவுகள் யாருக்குச் சாதகமாக அமையும் என்ற யூகத்தில் ஏறத்தாழ நான்கில் மூன்று பங்கு
ஆதரவுடன் அதிமுக 74 சதவீதம் பெற்று முதலிடம் பெறுகிறது.தற்போது வாக்களிப்பதாக இருந்தால்
பெரும்பாலோர் ( 56 சதவீதம்) வாக்கு அதிமுகவுக்கு செல்கிறது.எனினும் தற்போது நிலவும் அரசியல் சூழலில்
இடைதேர்தல் வந்தால் அதிமுகவின் வெற்றி தவிர்க்க முடியாதது என்று கள நிலவரம் உள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்