புதிய கருத்தை சேர்

ராஜபாளையம் நகராட்சியில் 150 வாகனங்கள் மூலம் 3 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை மற்றும் திடக்கழிவுகள் அகற்றம் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.

ஞாயி, 01/11/2015 - 23:15 -- Velayutham
Undefined
 
 
 
இது குறித்து  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.
 
 
ராஜபாளையம் நகராட்சியில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகள் நகராட்சி நிர்வாகமானது நகராட்சி
நிர்வாகத்துறை, சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி முழு வீச்சில்
போர்கால அடிப்படையில் தூய்மையற்ற குப்பைகள், மண் கழிவுகள், ஆக்கிரமிப்புகள், சுகாதார கழிவுகள்,
கால்வாய் தூர்வாருதல், தேவையற்ற பள்ளங்களை மூடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாதிப்பு அதிகம் என கண்டறியப்பட்ட 11 வார்டுகளில் ஒரு வார்டுக்கு ஒருவர் வீதம் 11 நகராட்சி
ஆணையர்கள் வீதம் சுமார் 500 பணியாளர்களைக் கொண்டு கொசுக்களை அழிக்கும் பணியும்; குப்பைகளை
அகற்றி தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் பொது மக்கள் வசிக்கின்ற குடியிருப்புப்;பகுதிகளில் தற்போது கொசுக்களின் விகிதம் 18.8
சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக குறைந்துள்ளது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பணிகள் அனைத்தும்
முடிவடையும் நிலையில் படிப்படியாக 2 சதவீதம் என்ற அளவில் குறைய வாய்ப்புள்ளது. மேலும் ராஜபாளையம்
நகராட்சியில் 42 வார்டுகளிலும் போர்க்கால அடிப்படையில் 45  வாகனங்கள் 2 ஹிட்டாச்சி புல்டோசர், 1
கிரேன், 56 டிராக்டர்கள், 46 லாரிகள் என ஆக மொத்தம் 150 வாகனங்கள் களப்பணியில் இறங்கி சுமார்
3000 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் திட கழிவுகளை அகற்றி குப்பை கொட்டும் வளாகத்தில்
கொட்டப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறை வாகனங்கள் மூலம் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை முடுக்கி
விடப்பட்டுள்ளது. வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு ஒரு முறை பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்குவதற்கு
நகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டும் அல்ல, நகராட்சி பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளை உருவாக்கும் வண்ணம் சுற்றித்திறியும் பன்றிகளை
அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக
தமிழக அரசின் நகராட்சி நிர்வாக இயக்குநர் ராஜபாளையத்தில் முகாமிட்டு நடைபெற்று வரும் அனைத்து
பணிகளையும் கண்காணித்து வருகிறார். அதே போல் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்
வழங்கல் துறை செயலாளர் .பணீந்தர ரெட்டி. ராஜபாளையம் வருகை தந்து நகராட்சி நிர்வாகம் மூலமாக
முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்பு மற்றும் குப்பை அகற்றும் தூய்மை பணிகளையும்,
அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர் மற்றும் விருதுநகர் நகராட்சிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புரவு
மற்றும் தூய்மை பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஆகவே பொது மக்களின் நலன் காப்பதில் நகராட்சித்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினா; தீவிரப்பணியில்
ஈடுபட்டு குறைபாடுகள் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் குறைகள் அனைத்தும் களையப்படும். எனவே, பொது
மக்கள் அச்சம் தவிர்த்து நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ள துப்புரவு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க
வேண்டும் இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்