புதிய கருத்தை சேர்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு பிரசவம். ஐஸ்வரியா மருத்துவமனை சாதனை.

ஞாயி, 01/11/2015 - 23:26 -- Velayutham
Undefined
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு பிரசவம் செய்து ஐஸ்வரியா மருத்துவமனை சாதனை செய்துள்ளது.
இது குறித்து ஐஸ்வர்யா மருத்துவமனையின் டாக்டர் சந்திரலேகா  சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கோவையை சேர்ந்த 32 வயது அனிதா கடந்த ஆறு ஆண்டுகளாக கருத்தரிக்காமையினால்
பாதிக்கப்பட்டிருந்தார்..குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு எங்களிடம் வந்தார்,திருமணம்
நடைபெற்று ஒரு ஆண்டுக்குள் பெர்ஜர் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிறு நீரகங்களில் கழிவுககைச் சுத்தம்
செய்திடும் வடிகட்டிகள் கொஞ்சம் கொஞ்சமான திறன் இழந்து சிறுநீரகச் செயலிழப்பு ஏற்ப்பட்டது
.இதற்க்காக அடிக்கடி சிறுநீரகம் வழி இரத்த்தை சுத்தமாக்க டாயாலிசிஸ் செயல்பாட்டினை
மேற்கொண்டார்.,
இது பலன் அளிக்காமல் போகவே 2008 ஆம் ஆண்டில் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்க்கொண்டார்.இவருடைய
தாயார் இவருக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கினார்.
குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆவலில் வந்த இவருக்கு கருத்தரிப்பிற்கான தகுதி உறுதி
செய்யப்பட்டது.சிறுநீரக செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டது.
கணவன்,மனைவி இருவருக்கும் இயற்கையாகக் கருத்தரிக்க சிகிச்சையும்.ஐ.யு.ஐ என்ற சுத்தமாக்கப்பட்ட
விந்தணுவினை நேரடியாக கருப்பையில் செலுத்துதல் சிகிச்சையும் ஒரு ஆண்டுக்கு மிகக் குறைந்த பாதுகாப்பான
மருந்துகளுடன் அளிக்கப்பட்டது.ஆனால் இந்த முறை வெற்றிபெறவில்லை.
இறுதியாக கணவன்,மனைவி இருவருக்கும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளுதல் மற்றும்
சோதனைக் குழாய் கருத்தரிப்பு செய்து தானே குழந்தையின் கருவினை சுமத்தல் ஆகிய இரண்டு குறித்து ஆய்வு
செய்தனர்.பன்னாட்டளவில் இது போல சிறுநீரக மாற்று  சிகிச்சைப் பின்னர் சோதனைக் குழாய் மூலம்
கருத்தரிப்பதில் கூடிய அனைத்து நன்மைகளும் அபாயங்களும் ஆய்வு செய்யப்பட்டன.அவை அனைத்தும் இவர்களுடன்
கலந்துபேசப்பட்டது.பின்னர் எங்களின் வழிகாட்டுதலோடு  சோதனைக் குழாய் கருத்தரிப்பு சிகிச்சையினை
மேற்கொண்டார்.
ஒரே ஒரு ஆரோக்கியமான தொடக்க நிலையிலுள்ள முட்டைக் கருவுயிர் தேர்தெடுக்கப்பட்டு அனிதாவின்
கருப்பைக்கு மாற்றப்பட்டது.தொடந்து கண்காணிக்கப்பட்டுவந்த நிலையில்  அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை
பிரவிக்கப்பட்டது.
குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.
இந்தியாவிலேயே சிறுநீரக மாற்று அறுகை சிகிச்சை மேற்கொண்ட பெண்களில் ஒருவர் செயற்கை கருத்தரிப்பு
முறையில் கருவுற்று மிகச் சிறந்த நலத்துடன் முழுமையாக தாயிடமே  வளர்ந்த குழந்தையை பெற்பெடுப்பது
ஆசிய அளவில் இரண்டாம் இடத்தையும் இந்தியாவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது.

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்