மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

வியா, 09/27/2012 - 17:15 -- Reporter
சென்னை
பல மாவட்ட அதிகாரிகள் இன்று திடீர் இடமாற்றம்.

குறிப்பாக கிரானைட் ஊழலில் இடம்பெற்ற மதிவாணன் மாவட்ட தொழில்துறை நிர்வாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இத்துறைதான் கிரானை குவாரி ஊழல்களை விசாரிக்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் இரண்டாம்முறையாக அதிகளவிலான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் சென்னை மாவட்ட கலெக்டரும் அடங்குவார். இதில் மதப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் உமாசங்கர் இடம்பெறாதது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிரான்ஸ்பர் விவரம். பழைய பணியிடம் அடைப்பு குறிக்குள்

1. பூஜா குல்கர்னி(இணை ஆணையர் (சுகாதாரம்) சென்னை மாநகராட்சி) =கிருஷ்ணகிரி கலெக்டர்.
2. ஜி.கோவிந்தராஜ், (கூடுதல் இயக்குனர் நகர் வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து  ராஜ்) திருப்பூர் கலெக்டர்.
3. எம்.மதிவாணன் (கலெக்டர், திருப்பூர்), கூடுதல் இயக்குனர் நகர் வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து  ராஜ்.
4. சி.மனோகரன், (கூடுதல் பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள்), கலெக்டர், புதுக்கோட்டை.
5. வி.கலையரசி, (கலெக்டர், புதுக்கோட்டை), கூடுதல் பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள்.
6. எஸ்.ஜெயந்தி, (கலெக்டர், சென்னை) கலெக்டர், கரூர் மாவட்டம்.
7. சி.என்.மகேஸ்வரன், (கலெக்டர், கிருஷ்ணகிரி) துணை ஆணையர், சுகாதாரம், சென்னை மாநகராட்சி.
8. விக்ரம் கபூர், (தலைவர், மாசுகட்டுப்பாட்டு வாரியம்) செயலாளர், தொழில்துறை.
9. டாக்டர் செந்தில்குமார்,(முன்னாள் போக்குவரத்து ஆணையர்) சிறப்பு செயலாளர், சுகாதாரம் மற்றும் மக்கள் நலம்.
10. டாக்டர் ராதாகிருஷ்ணன், (செயலாளர், சிறப்பு திட்டம் அமலாக்கம்) செயலாளர் சுகாதாரம் மற்றும் மக்கள் நலம்.
11. பிரகாஷ், (இணை ஆணையர், தொழில் துறை) இயக்குனர் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி.
12. என்.மதிவாணன், (இயக்குனர், தமிழ்நாடு சர்க்கரை கழகம்), இணை செயலாளர், தொழில் துறை.
13. மகேசன் காசிராஜன், (இயக்குனர், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி), இயக்குனர் தமிழ்நாடு சர்க்கரை கழகம்.
14. ஜோதி நிர்மலா, (இயக்குனர், சமூக நலத்துறை) செயலாளர், மாநில தேர்தல் ஆணையம்.
15. சேவியர், (செயலாளர், மாநில தேர்தல் ஆணையம்) செயலாளர், சமூக நலத்துறை.
16. மோகன்ராஜ், துணை செயலாளர், போக்குவரத்து கழகம்.
17. அனில்மேஷ்ராம், (உறுப்பினர் செயலாளர், திட்ட கமிஷன்) இயக்குனர், விவசாய மார்கெட்டிங் மற்றும் விவசாய வர்த்தகம்.
18. சந்திரகுமார், இயக்குனர் நில சீர்திருத்தம்.
19 பாலாஜி, உறுப்பினர் செயலாளர், திட்ட கமிஷன்.
20. ஹன்ஸ்ராஜ் வர்மா(தலைவர், செயலாளர் சிறுதொழில் வளர்ச்சி கழகம்) செயலாளர், சிறு,குறு நடுத்தர தொழில்கள்.
21. குமார் ஜெயந்த், (பொது மற்றும் மறுவாழ்வுதுறை) உறுப்பினர் செயலர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம்.
22. மோகன்தாஸ், மறுவாழ்வுதுறை

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்