சொத்துகுவிப்பு வழக்கு: சசிகலாவுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி

வியா, 09/27/2012 - 15:43 -- Reporter
புதுடில்லி: 
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு, வழக்கு குறித்த ஆவணங்களை பார்வையிட சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது.
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு பெங்களுரூ தனிகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சசிகலாவிடம் 500-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய ஆவணங்களின் நகல்களை பார்வையிட கோரி சசிகலா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். 
இந்த மனு மீது இன்று நடந்த விசாரணையில் நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகெய் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச்அளித்த உத்தரவில், ஆவணங்களின் நகல்களை பார்வையிட சசிகலாவிற்கு அனுமதியளித்தனர். இதில் 21 நாட்களுக்குள் ஆவணங்களை பார்வையிட வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனர். 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்