கூடங்குளம் அணுஉலை: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வியா, 09/27/2012 - 21:30 -- Reporter
புதுடில்லி: 
அணுஉலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்க உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.
கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்ப கோர்ட் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனு இன்று விவாதத்திற்கு வந்தது. 
மனுதாரர் சார்பில் பிரசாந்த் பூசன் ஆஜரானார். நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா விசாரித்தனர். 
இதில் மத்திய அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது: 14 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு, பல குழுக்களின் ஆய்வு அறிக்கை அடிப்படையில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. என கூறப்பட்டது. 
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் பணம் என்பதை விட பாதுகாப்பு மிக முக்கியமானது. இதனை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றனர். இதனையடுத்து அணுஉலை தொடர்பாக சுற்றுச்சூழல் குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்க வேண்டும் என கூறி, வழக்கு விசாரணை வரும் நவம்பர் 4-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்