காவிரிநதிநீர்: கர்நாடகாவிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

வெள், 09/28/2012 - 20:10 -- Reporter
புதுடில்லி: 
காவரி நதிநீர் ஆணையத்தின் படி தமிழகத்திற்கு 9000 கனஅடி நீர் திறந்துவிட கர்நாடகாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்திற்க தினமும் 2 டி.எம்.சி. வீதம் 24 நாட்களுக்கு 48 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவிற்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது
இந்நிலையி்ல் இந்த மனு இன்று நீதிபதிகள் டி.ஜே. ஜெயின், மதுபிலோகர் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. இதில் வினாடிக்கு 9000 கனஅடி நீரை தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என உத்தரவிட்டது., மேலும் இந்த விவகாரத்தில் பிரதமரின் உத்தரவினை மதித்து நடக்காதது ஏன்  கர்நாடகாவிற்கு கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் கர்நாடகா பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்