காவிரி விவகாரம்: எம்.எல்.ஏ.க்கள், எம்.பி. ராஜினாமா

திங், 10/01/2012 - 16:43 -- Reporter
பெங்களூரு: 
கர்நாடகாவில் காவிரி தண்ணீர் திறந்துவிட்டதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒரு எம்.பி. தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். 
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு கர்நாடகா நேற்று நள்ளிரவு , இரு அணைகளில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டது.
 முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் பதவி விலகிடகோரியும், கர்நாடகா விவசாயிகளுக்கு அநீதி இழைத்துவிட்டதாக கூறி கர்நாடகாவில் முக்கிய எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த மாண்டியா தொகுதி எம்.பி., மற்றும் 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தினை தன்னிடம் அளித்ததாக அக்கட்சியின் தலைவர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்