இலங்கை தமிழர் நலன்: கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்

செவ், 10/02/2012 - 18:00 -- Reporter
புதுடெல்லி.
இலங்கை தமிழரின் நலன் குறித்து திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்துக்கு பிரதமர் பதில் அனுப்பியுள்ளார்.

இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்துக்கு இன்று பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

கடிதத்தில், உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் குறித்து நான் கவனத்தில் எடுத்துக் கொள்வேன். இலங்கையில் நடந்து முடிந்த போருக்குப் பிறகு அங்கு வாழும் தமிழர்களின் நலனைக் காக்கவும், அவர்களது மறுவாழ்வுக்காவும் மத்திய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

இலங்கை வாழ் தமிழர்களின் மறு வாழ்வை நல்ல முறையில் அமைப்பதும், அவர்கள் மீண்டும் அமைதியாக வாழ்வதையும் உறுதி செய்வதே மத்திய அரசின் முக்கிய பணியாகும்.

இலங்கையில் உள்ள தமிழர் அரசியல் கட்சிகளுடன் பேசி அங்கு தமிழர்களுக்கு சம அதிகாரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு இலங்கை அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை, மரியாதை, நியாயம், சுய மரியாதை அளிப்பதை உறுதி செய்வதாக இலங்கை அரசும் கூறியுள்ளது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசும் இணைந்து பணியாற்றும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்