தவறு இருந்தால் என்னை சிறையில் தள்ளலாம்.:மம்தா

திங், 10/01/2012 - 19:10 -- Reporter
புதுடில்லி: 
தவறு இருந்தால் என்னை சிறையில் தள்ளலாம் என மம்தா தெரிவித்துள்ளார். 
சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை கண்டித்து டில்லி ஜந்தர்மந்தரில் திரிணாமுல் காங். எம்.பி.க்கள் ,மம்தா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மம்தா கூறியதாவது;
மத்தியில் ஆளும் காங். அரசு மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. ஆனால் திரிணாமுல் காங். கட்சி எப்போதும் மக்களுக்காக பாடுபடும் . கூட்டணியில் இருந்த வரை நான் ஆட்சியாளர்கள் யாரையும்,நான் எப்போது விமர்சித்ததில்லை. என்மீது தவறு இருந்தால் என்னை சிறையில் தள்ளலாம். திரிணாமுல் காங். மீது எந்தவித குற்றச்சாட்டும் இதுவரை இல்லை. எனது கட்சி காங்கிரசின் மக்கள் விரோத போக்கை எதிர்த்து தொடர்ந்து போராடும். மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதே ஆட்சியாளர்களை கடமை . அதனை அவர்கள் தவறிவிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்க சதி செய்யும் முயற்சி நடக்கிறது . இவ்வாறு மம்தா பேசினார்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்