திருமாவை சுற்றி சுயநலமிகள்: வழக்கறிஞர் ஆர்வலன் பேட்டி

வெள், 10/05/2012 - 01:30 -- Reporter

சென்னை

திருமாவை சுற்றி சுயநலமிகள் இருப்பதாக வழக்கறிஞர் ஆர்வலன் தெரிவித்துள்ளார்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக இருந்த ஆர்வலன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்,

அப்போது அவர் கூறியதாவது

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் முக்கிய பதவிகளில் தலித் அல்லாத சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என்ற காலகட்டத்தில் தலித்துகளின் மேம்பாட்டில் அக்ககறை உள்ளவன் என்ற முறையில் 2004 ஆம் ஆண்டு கட்சியில் தொண்டனாக என்னை இணைத்து கொண்டேன்,
2007 ஆம் ஆண்டு தலித் அல்லாதவர்களும் கட்சி பதவியில் வரலாம் என்ற விதி முறையை கொண்டுவந்தபோது 2008 ஆம் ஆண்டு கட்சியின் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டேன்.
கட்சி பதவியை அளித்த பின்புதான் பல பிரச்சனைக்கு நான் ஆளானேன்,கட்சியிலிருந்து எங்களைபோன்ற ஜனநாயக சக்திகளை வெளியேற்றவேண்டும் என்று சிலசக்திகள் முயன்றது,
அவர்களால் மிகுந்த அச்சுறுத்தளுக்கு ஆளானோம்,
திருமாவை சுற்றி எங்களுக்கு கடும் இடையூடுகளை தந்தனர்,நாக்கூசும் சொற்களால் கட்சிக் கூட்டங்களிலேயே நாங்கள் வசபாடப்பட்டோம்.
திருமாவிடம் எங்களுக்கு ஏற்படுத்தப்படும் அவமானங்களை எத்தனையோ முறை எடுத்துக் கூறியும் பாராமுகமாகவே இருந்துவிட்டார்.
கட்சியின் முக்கிய பதவிகளுக்கு வந்த பிற்படுத்தப் பட்டோரை வந்தேறிகள் என்று விமாசனம் செய்தனர்,
தலித்துகளின் விடுதலையை தலித்துகளே வென்றெடுக்க வேண்டும் என்ற பிற்போக்கான வாதம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளால் முன்வைக்கப்படுகிறது.
மேலும் இலங்கை தமிழர்கள் கூண்டோடு அழிய காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியியுடன் கூட்டணி வைத்துள்ள சிறுத்கைள் கட்யிலிருந்து விலகி  பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறோம்,இதற்கான இணைப்பு விழா வரும் 6 ந் தேதி தமிழக பா,ஜ,க தலைவர் பொன்,ராதகிருஷ்ணன் தலைமையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள புண்ணியகோடி திருமண மண்டபத்தில் நுற்றுகனக்கான தொண்டர்கள் இணைகிறோம்.
இவ்வாறு பேட்டி அளித்தார்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்