காதல் ஜோடிகள் கொலை :ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தூக்கு

வெள், 10/05/2012 - 17:49 -- Reporter
புதுடில்லி:
 இளம் தம்பதியினரின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவுரவ கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு டில்லி செஷன்ஸ் கோர்ட் இன்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. 
மேற்கு டில்லியின் சுவரூப் நகரைச் சேர்ந்த யோகேஷ் (20), ஆஷா(19) என்ற இளம் காதலர்கள் கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் ,பெற்றோர் எதிர்ப்பினை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.
ஆஷாவின் பெற்றோர் சூரஜ், மாயா, ஆஷாவின் மாமா ஓம்பிரகாஷ், இவரது மனைவி குஷ்பு, மற்றும் ஆஷாவின் அண்ணன் சஞ்சீவ் உள்ளிடடோர், ஆஷா, யோகேஷினை குடும்ப கவுரத்திற்காக கொலை செய்தாக வழக்கு நடைபெற்றது.
 இந்த விசாரணையில் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். பின்னர் நடந்த விசாரணையில் அரசு வழக்கில் பி.கே. வர்மா வாதிடுகையில், இரக்கமின்றி கவுரக்கொலை செய்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிட வேண்டும் என்றார். 
இதனை தொடர்ந்து  பெண்ணின் பெற்றோரான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சேர்ந்த 5 பேருக்கு மரண தண்டனை விதித்து கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரமேஷ்குமார் தீர்ப்பளித்தார்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்