எஸ்.எம்.கிருஷ்ணாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் :ராமதாஸ்

ஞாயி, 10/07/2012 - 16:50 -- Reporter
சென்னை
பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை

சம்பா சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் அவதிப்பட்டு வரும் நிலையில், காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்படும் நீரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஆணையிடுமாறு பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதியுள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. இந்திய அரசியல் சட்டப்படி மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவர் ஒட்டுமொத்த நாட்டுக்கும் அமைச்சராக இருக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையே பாகுபாடு காட்டக்கூடாது. ஆனால் வெளியுறவுத்துறை அமைச்சரான கிருஷ்ணா துவக்கத்தில் இருந்தே தன்னை கர்நாடகத்தின் பிரதிநிதியாகத்தான் காட்டிக் கொண்டு வந்திருக்கிறார். எனவே எஸ்.எம்.கிருஷ்ணாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்