தாட்கோ மூலம் மானியக் கடன்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

புத, 10/10/2012 - 02:00 -- Reporter
சென்னை
தாட்கோ மூலம் மானியத்துடன் கடன் உதவி பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அக். 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தாட்கோ மேலாண்மை இயக்குநர் ஆ.சுகந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தாட்கோ மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாட்கோ மூலம் கடன் உதவி பெறுவதற்கு அக். 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது, அக். 21-ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. மானியத்துடன் கடன் உதவி பெற விண்ணப்பிப்பவர்கள் ஆதிதிராவிடர்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். திட்ட அறிக்கையை பெறப்பட்ட தேதியையும் குறிப்பிட வேண்டும். புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒரு குடும்ப அட்டையை வைத்து ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மகளிர் சுய உதவிக்குழு சுழல்நிதித் திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்பும் மகளிர் அனைவருமே 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

சில மாவட்டங்களில் சில திட்டங்களுக்கு போதிய அளவில் விண்ணப்பங்கள் வரவில்லை. மேலும், பொதுமக்களிடமிருந்து கால நீட்டிப்பு வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்தது. அதனால், அக். 21ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்