ஒடிஷாவில் டெங்கு பாதிப்படைந்தோர் 1520 பேர்

புத, 10/24/2012 - 21:30 -- Reporter
புவனேஸ்வர்


ஒடிஷாவில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்துள்ளது.இன்று டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாநிலத்தில் இதுவரை டெங்குவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.இந்தத் தகவலை மாநில சுகாதாரத் துறை இணை இயக்குனர் எம்.எம்.பிரதான் தெரிவித்துள்ளார். இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உயிரிழந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு மட்டும் டெங்கு பாதிப்பு இருக்கிறது என்று தெரியவந்தது. கடந்த வருடத்தில் அன்குல் மாவட்டம் தல்சார் பகுதியில் வைரஸ் காய்ச்சலால் குறைந்தது 33 பேர் உயிரிழந்தனர். இந்த வருடம் அரசு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 
Undefined
Topic: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்