காங்கிரஸ், பாஜக அல்லாத அணியை உருவாக்க ஆதரவு: முலாயம் சிங்

ஞாயி, 10/28/2012 - 00:45 -- Reporter
புது தில்லி

மூன்றாம் அணி முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், சனிக்கிழமை இன்று மீண்டும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி உருவாக்க ஆதரவு கொடுப்பதாகவும், தங்கள் கட்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் சேரும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறியுள்ளார்.

சிபிஐ, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தம்மிடம் பேசி வருவதாகவும், மாற்று அரசியலுக்கு ஏதாவது முயற்சிகளை தாம் மேற்கொள்ள வேண்டும் என்று கோரி வருவதாகவும் முலாயம் சிங் யாதவ் கூறினார்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்