கூடங்குளம் போராட்டக்குழு நாளை சட்டமன்ற முற்றுகை , காவல்துறை சென்னையை சுற்றி பலத்த சோதனை

திங், 10/29/2012 - 00:17 -- Reporter
சென்னை அக். 28:-
நாளை காலை 9.30 க்கு சட்டமன்றம் முற்றுகை . அணு உலை எதிர்ப்பு தலைவர்கள் தலைமையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து துவக்கம் என்று பல்வேறு அமைப்புக்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தன. இந்நிலையில் சென்னைக்கு வெளியே காவல்துறையினர் பலத்த சோதனைகளை மேற்கொண்டுவருகின்றனர். சுற்றுலா பேருந்து, மகிழுந்து, சந்தேகப்படும்படியாக கும்பலாக பயணிப்பவர்களை சோதனை செய்கின்றனர், இதனால் சென்னையை நோக்கி வரும் போக்குவரத்து மெதுவாக ஊர்ந்து வரும் நிலையிலேயே உள்ளது. பெருங்களத்தூர் முன் ஸ்ரீராம் தொழில்நுட்பபூங்கா எதிரே சென்னையை நோக்கி வரும் சந்தேகத்துக்கிடமான வாகனங்களை காவல்துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டுவருகின்றனர். 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்