மின்வெட்டை நீங்களே அனுமதிக்கிறீர்கள்: விஜயகாந்த் எரிச்சல் பதில்

ஞாயி, 10/28/2012 - 16:40 -- Reporter
மதுரை
மின்வெட்டை நீங்களே அனுமதிக்கிறீர்கள் என்று விஜயகாந்த் எரிச்சலுடன் பதில் அளித்தார்.

இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்விகள் கேட்க முனைந்தனர். 

நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் தேமுதிகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வரை சந்தித்தது குறித்து கேட்க முனைந்தனர். அப்போது அவர், ஏனய்யா நாட்டிலே மின்வெட்டு இருக்கிறது, டெங்கு இருக்கிறது அதையெல்லாம் கேளுங்கள்... அதைவிட்டு இது ரொம்ப முக்கியமா என்று கோபாவேச வசனம் பேசினார். அதனால், அவர் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புணர்ந்து மின்வெட்டு பற்றி கேள்வி கேட்டால் ஒரு கருத்து தெரிவிப்பாரோ என்ற எதிர்பார்ப்பில் இன்று காலை மதுரையில் செய்தியாளர்கள் அவரிடம் மின்வெட்டு பற்றி கருத்து கேட்டனர். அதற்கு அவர், "ஆமாம் மின்வெட்டை நீங்களே அனுமதிக்கிறீர்கள்... பிறகு என்னிடம் வந்து ஏன் கேட்கிறீர்கள்” என்று எரிச்சலில் பதில் அளித்துவிட்டு, தனது எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை மீண்டும் ஒரு முறை நிரூபித்துச் சென்றார்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்