நவம்பர் 19ம் தேதி தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்படாது

வெள், 11/02/2012 - 19:00 -- Reporter

கிருஷ்ணகிரி

பள்ளி வாகனங்களுக்கு தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தி நவம்பர் 19ம் தேதி தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் தனியார் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக
தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தனியார் பள்ளி வாகனங்களுக்கு பல புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு
விதித்தது.அதன்படி, பள்ளி வாகன ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தினால் பள்ளி தாளாளரையும் கைது செய்யும் விதியையும், பள்ளி வாகனத்தில், ஓட்டுனருக்கு தனி அறை அமைப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற உள்ளது.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தனியார் பள்ளி சங்கக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்