தரை தட்டிய கப்பலிலிலிருந்து உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றிய மீனவர்களுக்கு தமிழக அரசு ஒரு லட்சம் வழங்கி பாராட்டு

வெள், 11/09/2012 - 18:15 -- Reporter
சென்னை நவ. 9:-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (9.11.2012) தலைமைச் செயலகத்தில்,  “நீலம்”  புயல் காரணமாக தரை தட்டிய  “பிரதீபா காவேரி” என்ற தனியார் சரக்குக் கப்பலில் இருந்து படகில் கரை சேர முயற்ச்சித்தபோது, கடலில் உயிருக்கு போராடிய பணியாளர்களை மீட்ட ஊரூர் குப்பத்தைச் சேர்ந்த திரு. வடிவேலு, திரு. கலைமணி, திரு. உதயமூர்த்தி,  திரு. மதன்  மற்றும் திரு. கோபி ஆகியோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கி பாராட்டினார்கள்.
கடந்த 31.10.2012 அன்று வங்கக் கடலில் வீசிய  “நீலம்”  புயல் காரணமாக  “பிரதீபா காவேரி”  என்ற தனியார் சரக்குக் கப்பல் தரை தட்டியது.  அக்கப்பலில் இருந்த 25 பணியாளர்கள் உயிர் காக்கும் படகில் ஏறி கரை சேர முயன்ற போது, அப்படகும் கவிழ்ந்து அனைவரும் கடலுக்குள் வீழ்ந்து உயிருக்கு போராடியபோது, கடும் புயல் வீசிக்கொண்டிருந்த போது  தங்களது உயிரை துச்சமென மதித்து,  கடலுக்குள் சென்று கப்பல் பணியாளர்களை மீட்டெடுத்த ஊரூர் குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் திரு. வடிவேலு, திரு. கலைமணி, திரு. உதயமூர்த்தி, திரு. மதன் மற்றும் கப்பல் பணியாளர்களை காப்பாற்ற தனது படகினை அளித்த திரு.கோபி ஆகிய ஐந்து பேர்களின் வீரச் செயலையும், தன்னலமற்ற சமுதாய   அக்கறையையும் பாராட்டி தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று 6.11.2012 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அதன்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், ஊரூர் குப்பத்தைச் சேர்ந்த  திரு. வடிவேலு, திரு. கலைமணி, திரு. உதயமூர்த்தி, திரு. மதன் மற்றும் திரு. கோபி ஆகியோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கி பாராட்டி, வாழ்த்தினார்கள்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களிடமிருந்து நிதியினை பெற்றுக் கொண்ட மீனவர்கள், தங்களது செயலை பாராட்டி, அங்கீகரித்ததோடு, நேரில் அழைத்து நிதி அளித்து ஊக்குவித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில், பொதுத்துறைச் செயலாளர் கலந்து கொண்டார்.

செய்தி: தமிழக அரசு

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்