சென்னையில் உள்ள அரசு பொதுமருத்துவமனைகள் நவீனபடுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

சனி, 11/17/2012 - 23:52 -- Reporter

சென்னை நவ. 17:- தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு,

அறிவுசார் சமுதாயம் உருவாக காரணிகளாக விளங்குவது கல்வியும் ஆரோக்கியமும் ஆகும். தமிழகத்தை ஆரோக்கியம் நிறைந்த மாநிலமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.அந்த வகையில், நகர்புற மக்களுக்கு இணையாக கிராமப்புற மக்களுக்கும், மருத்துவ வசதி கிடைக்கச் செய்யவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு, அவசர மகப்பேறு, அறுவை சிகிச்சை போன்றவற்றிற்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் அளிக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவ நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுதல், கட்டடங்களைப் பழுது பார்த்தல், புதிய மருத்துவ நிலையங்களை ஆரம்பித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உயரிய சிகிச்சை கிடைக்கும் வகையில், மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அனைத்தும் நவீனப்படுத்தப்பட வேண்டும் என்பது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் எண்ணமாகும். அதன்படி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றிலுள்ள அறுவை சிகிச்சை அரங்குகளை நவீனப்படுத்த 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய ஒரு தனிப் பிரிவு செயல்பட்டு வருகின்றது. இந்த சிகிச்சை பிரிவுக்கு வரும் நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், தீக்காயங்களுக்கான சிகிச்சை பிரிவின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், இப்பிரிவினை சிறப்பு உயர்நிலை மையமாக தரம் உயர்த்தும் வகையில், கூடுதலாக கட்டடங்கள் கட்டுவதற்கும், புதியதாக நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும்,மற்றும் 38 பணியிடங்களை உருவாக்குவதற்கும் 4 கோடியே 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தால், தமிழகத்தால் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய் பாதிப்பால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள குழந்தைகளின் நலனுக்காக அரசின் நிரந்தர மூலதன உதவியுடன் ஒரு அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் மூலம், மேலும் அதிகமான குழந்தைகளுக்கு உதவி செய்வதற்கு ஏதுவாக தற்பொழுதுள்ள நிரந்தர மூலதன நிதியுடன் கூடுதலாக 5 கோடி ரூபாய் வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த கூடுதல் 5 கோடி ரூபாய் நிதி ஏற்கெனவே உள்ள நிரந்தர மூலதன நிதியுடன் சேர்த்து தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் நிரந்தர மூலதன நிதியாக வைக்கப்படும்.

இந்த நிரந்தர மூலதன நிதியிலிருந்து கிடைக்கும் வட்டியின் மூலம் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட மற்றும் எய்ட்ஸ் நோய் பாதிப்பால் அனாதையாக்கப்பட்ட மேலும் 1,000 குழந்தைகள் பயன் அடைவார்கள்.மேலும், தமிழகத்தில் உள்ள மாவட்ட மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள பிரேத பரிசோதனை கூடங்களை நவீனப்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள். இதன்படி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள பிரேத பரிசோதனைக் கூடங்கள் நவீனப்படுத்தப்படும்.
DIPR-P.R.NO.683 Hon'ble CM- modernisation of operation theatre, etc.Date-17.11.12

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்