திருப்பூர் பாசி மோசடி வழக்கில் பல கோடிகளை மிரட்டிப் பறித்த ஐ.ஜி பிரமோத் குமார், சி.பி.ஐ வழக்கறிஞரை குடித்துவிட்டு மிரட்டல்

திங், 11/19/2012 - 08:05 -- Reporter

28 ஜுன் 2012 அன்று பிரமோத் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.  ஜாமீன் வழங்குகையில்,  பிரமோத் குமார் தன்னாடு பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளையோ, தனக்குக் கீழ் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளையோ, இவ்வழக்கு தொடர்பாக பார்க்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தது.

பிரமோத் குமார் இதற்கெல்லாம் அஞ்சுகிற நபரா… ?  எப்போதும் போல தமிழகத்தில் உள்ள வட இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டு மகிழ்ச்சியாகத்தான் உள்ளார். அவருக்கான எந்த வசதிகளும் குறையவேயில்லை.  தமிழக காவல்துறையில் கூடுதல் டிஜிபிக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஹோண்டா சிட்டி காரில்தான் பவனி வருகிறார்.  தமிழக ஆயுதப்படை ஐ.ஜிக்கு வழங்கப்பட்டுள்ள சிகப்பு விளக்கு வைத்த வெள்ளை நிற ஹோண்டா சிட்டி காரில்தான் பிரமோத் குமார் பயணிக்கிறார்.  தமிழக காவல்துறையில் உள்ள வட இந்திய லாபி மிகப்பெரிய லாபி. காப்பாற்றப்படுகிறாரா பிரமோத் குமார் என்ற கட்டுரையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.  இந்த வட இந்திய லாபி, பிரமோத் குமாரை தொடர்ந்து காப்பாற்ற முயற்சித்து வருகிறது.

ஒரு சாதாரண அரசு ஊழியர் வீட்டை சிபிஐ சோதனையிட்டால் அடுத்த வினாடியே அவர் பணி இடை நீக்கம் செய்யப்படுவார்.  ஆனால் மார்ச் மாதம் பிரமோத் குமார் வீட்டை சிபிஐ சோதனையிட்டும், அவர் பணி இடை நீக்கம் கூட செய்யப்படாமல் தொடர்ந்து ஆயுதப்படை ஐ.ஜியாக பணியாற்ற அனுமதிக்கப்பட்டார்.  அந்த அளவுக்கு வட இந்திய லாபி பவர்புல்லாக இருக்கிறது.

அந்த வட இந்திய அதிகாரிகள் அளித்த ஆலோசனையின் படியே, சிபிஐ மீது வழக்கு தொடர்ந்தார் பிரமோத் குமார்.  தனது மனுவில், சிபிஐ தன்னை இவ்வழக்கில் பொய்யாகச் சேர்த்துள்ளதாகவும், அதனால் சிபிஐ தனக்கு 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.  இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பால் வசந்த குமார் முன்னிலையில் கடந்த வாரம் காரசாரமான வாதம் நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சென்னை உயர்நீதிமன்றத்துக்கான சிபிஐ வழக்கறிஞர் சந்திரசேகர், அரசு வழக்கறிஞர் கோவிந்தராஜ் மற்றும் வழக்கறிஞர் ருபு சந்திரசேகர் ஆகியோர் சென்னையில் உள்ள ஜிம்கானா கிளப்பில் மதிய உணவருந்தச் செல்கிறார்கள்.   சென்னை ஜிம்கானா கிளப்பில் ஒரு நபருக்கு மதிய உணவு எப்படியும் குறைந்தது 1500 ரூபாய் ஆகும்.   பணக்கார வக்கீல்கள் செல்கிறார்கள்… படிப்பவர்கள் பொறாமைப் படாதீர்கள்.

உணவருந்திவிட்டு திரும்புகையில், TN 07 8797 என்ற சிகப்பு நிற ஹோண்டா சிட்டி வாகனத்தில், சீருடை அணிந்த காவலரோடு பிரமோத் குமார் நன்றாக குடித்து விட்டு நின்றிருக்கிறார்.   எதிரே சிபிஐ வழக்கறிஞர் சந்திரசேகரனைப் பார்த்ததும், என்னய்யா நெனச்சுக்கிட்டு இருக்க உன் மனசுல என்ற ரேஞ்சுக்கு ஆங்கிலத்தில் வசவுகளை ஆரம்பித்திருக்கிறார்.  எப்படி நீ என்னைப் பற்றி கன்னா பின்னாவென்று வாதாடலாம், என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் உன் மனதில், நான் நினைத்தால் உன்னை என்ன செய்வேன் தெரியுமா ?  இந்த வழக்கில் நான் சிக்கிக் கொள்வேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா… எப்படியும் இந்த வழக்கிலிருந்து விடுதலை ஆகி விடுவேன்… நான் 7 வருடங்களுக்கு டிஜிபியாக இருப்பேன்… உன்னை தொலைத்து விடுவேன் தொலைத்து என்று ஏக வசனத்தில் பேசியிருக்கிறார்.   இந்த சல்லிப்பயலிடம் எதற்கு சண்டையிட வேண்டும் என்று சந்திரசேகரன் அமைதியாக திரும்பி விட்டார்.   இந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகளுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.

முழுகட்டுரையும் படிக்க சவுக்கு .

 

Undefined
Topic: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்