வேட்டவலம் பேரூராட்சியில் டெங்கு நோய் ஒழிக்க அதிரடி நடவடிக்கை

வியா, 11/22/2012 - 02:31 -- Reporter

வேட்டவலம் நவ. 21:-

வேட்டவலம் பேரூராட்சியில் டெங்கு நோய் ஒழிக்க அதிரடி நடவடிக்கை செயல் அலுவலர் கணேசன் தகவல், வேட்டவலம் பேரூராட்சியில் டெங்கு நோய் பரவாமல் தடுப்பது  குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின்  உத்தரவின்படியும்,  பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், திருவண்ணாமலை மாவட்ட பொது சுகாதார இணை இயக்குநர் அவர்களின் அறிவுரையின்படியும்,  பேரூராட்சி பணியாளர்கள் மற்றும்  மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பேரூராட்சிக்குட்பட்ட  அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொது மக்களுக்கு டெங்கு நோய் பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  பேரூராட்சியில்  10 நபர்களை   தற்காலிகமாக நியமிக்கப்பட்டு  பேரூராட்சி பகுதிகளில்  தண்ணீர் தேங்கியுள்ள இடங்களை கண்டறிந்து  கொசு மருந்து தெளித்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பேரூராட்சிக்குட்பட்ட  பகுதிகளில் உள்ள சிறு மின் விசை பம்பு மேல் நிலைநீர்த்தேக்கத்தொட்டிகளில் குளோரினேஷன் செய்தல் கால்வாய்களை சுத்தம் செய்தல், புகைமூட்டம் அடித்தல் போன்ற பணிகள்     விரைவாக மேற்கொள்ளப்பட்டது  இது குறித்து செயல்  அலுவலர் கணேசன் செய்தியாளர்களிடம் கூறும் போது  வேட்டவலம் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை அழிக்க போதுமான அளவு கிருமி நாசினிபொருட்கள் பேரூராட்சியில் இருப்பில் உள்ளதாகவும்,    அனைத்து தெருக்களிலும்,  கொசு மருந்து தெளித்தல், புகைமூட்டம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வீடுகளிலும் பொது இடங்களிலும் நேரில் சென்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் 10 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் தினசரி நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு அதன்படி  பணியாளர்கள் பணி செய்வது கண்காணிக்கப்பட்டும்  டெங்கு காய்ச்சல் பரவாமல்  இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்