வேட்டவலம் பேரூராட்சியில் விலங்கின பிறப்பு கட்டுப்படுத்துதல் கண்காணிப்பு குழு கூட்டம்

வியா, 11/22/2012 - 01:45 -- Reporter

வேட்டவலம் நவ. 21:-

வேட்டவலம் பேரூராட்சியில்  விலங்கின பிறப்பு கட்டுப்படுத்துதல் குறித்து கண்காணிப்பு குழு கூட்டம்  பேரூராட்சி மன்ற வளாக அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  விலங்கின பிறப்பு கட்டுப்படுத்துதல் குழு தலைவராக செயல் அலுவலர்  கணேசன்   கண்காணிப்பு  குழு உறுப்பினர்களாக பேரூராட்சி தலைவர் ஜனார்த்தனம்,  துணைத்தலைவர் தஷ்ணாமூர்த்தி மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவர் பாலமுரளி , கால்நடை மருத்துவர் செல்லன், மற்றும் செல்லபிராணிகள் வளர்ப்போரின் பிரதிநிதிகளாக கருணாகரன், பிரபாஜனார்த்தனம், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், இக்கூட்டத்தில் உரிமம் இல்லாமல் சுற்றி திரியும் நாய்கள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லபிராணிகளாக நாய்களுக்கு கால்நடை மருத்துவமனை மூலம் அறுவை சிகிச்சை செய்வதற்கு பேரூராட்சி மூலம் தொகை வழங்கவும், அவற்றிக்கு தடுப்பூசி போடவும், வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு  கால்நடை மருத்துவர் சான்று பெற்று வளர்க் வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்