புதியதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகக் கட்டடங்கள் மற்றும் சார் பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

வியா, 11/22/2012 - 23:14 -- Reporter

நாள்:22.11.2012
தமிழக அரசின் செய்தி வெளியீடு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (22.11.2012) தலைமைச் செயலகத்தில், மதுரை, வேலுhர், கடலுhர் ஆகிய மாவட்டங்களில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகக் கட்டடங்கள் மற்றும் ஈரோடு மாவட்டம் - அவல்பூந்துறை, திருப்பூர் மாவட்டம் - வெள்ளக்கோயில் ஆகிய இடங்களில் புதியதாக கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள், என மொத்தம் 5 கோடியே 7 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அலுவலகக் கட்டடங்களை காணொலி காட்சி  மூலம் திறந்து வைத்தார்கள்.

பொது மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பதிவுத்துறை அலுவலகங்கள் போதுமான இடவசதி, பாதுகாப்பான வைப்பறைகள் உட்பட அனைத்து வசதிகளுடன் இருக்க வேண்டும் என்பதால், அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் ஐந்தாண்டுகளுக்குள் சொந்தக் கட்டடம் கட்டப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அறிவித்திருந்தார்கள். அதன்படி, முதற்கட்டமாக 2011 - 2012ஆம் ஆண்டில் 52 சார்பதிவாளர் அலுவலகங்கள் கட்டுவதற்கு 26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.5.2012 அன்று சட்டப்பேரவையில், 2012-2013ஆம் ஆண்டில் 29 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளடங்கிய 17 ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகங்களுக்கும், 48 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தனித் தனியாக சொந்தக்கட்டடம் கட்டப்படும் என அறிவித்தார்கள்.

மதுரை மாவட்டம், இராசகம்பீரம் கிராமம், ஒத்தக்கடையில், 1 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மதுரை பதிவுத் துறை துணைத் தலைவர் அலுவலகம், பதிவுத்துறை உதவித் தலைவர் (சரகம்) அலுவலகம், மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) - மதுரை (வடக்கு), மாவட்டப் பதிவாளர் (தணிக்கை) - மதுரை (வடக்கு), இணை-ஐ சார் பதிவாளர் அலுவலகம் மதுரை (வடக்கு), சார் பதிவாளர் அலுவலகங்கள் -தல்லாகுளம், சொக்கிகுளம், தெப்பகுளம், தாமரைப்பட்டி ஆகிய 9 அலுவலகங்களை உள்ளடக்கி புதியதாக கட்டப்பட்டுள்ள மதுரை ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம்; வேலுhர் மாவட்டம், ஆரணி சாலையில், 1 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பதிவுத்துறை துணைத் தலைவர் அலுவலகம், மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்), மாவட்டப் பதிவாளர் (தணிக்கை) மற்றும் இணை-ஐ சார் பதிவாளர் அலுவலகம் ஆகிய 4 அலுவலகங்களை உள்ளடக்கி புதியதாக கட்டப்பட்டுள்ள வேலூர் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம்;கடலுhர் மாவட்டம், திருப்பாதிரிப்பூலியூரில், 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பதிவுத்துறை துணைத் தலைவர் அலுவலகம், மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்), மாவட்டப் பதிவாளர் (தணிக்கை) மற்றும் இணை-ஐ சார் பதிவாளர் அலுவலகம் ஆகிய 4 அலுவலகங்களை உள்ளடக்கி புதியதாக கட்டப்பட்டுள்ள கடலூர் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம்;ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை மற்றும் திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயில்
ஆகிய இடங்களில் தலா 28 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சார் பதிவாளர் அலுவலகங்கள், என மொத்தம் 5 கோடியே 7 லட்சத்து 16 ஆயிரம்ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.

இப்புதிய அலுவலகக் கட்டடங்களில், அலுவலர்களுக்கான அறைகளுடன் கணினி அறை, மாநாட்டுக் கூடம், பதிவுறுக்கள் பாதுகாப்பு அறை, பொதுமக்கள் வசதிக்காக காத்திருப்போருக்கான அறை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கான சாய்தள மேடை, அகலமான நடைபாதை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், பதிவுத்துறை உயர் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 1 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 23 பொலிரோ வாகனங்களை வழங்கினார்கள்.


இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்,தலைமைச் செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர், பதிவுத்துறைத்தலைவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Undefined
Topic: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்