வாக்காளர் இறுதி பட்டியல் 2013 சனவரி மாதம் வெளியிடப்படும்

வெள், 11/23/2012 - 05:14 -- Reporter

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு,

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம், 2013-ல், பெயர் சேர்த்தல்/நீக்கல்/திருத்தல்/இடம் மாற்றுதல் முதலியவற்றுக்கான விண்ணப்பங்கள் அளிக்க காலக்கெடு 20-11-2012-உடன் முடிந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி இறுதி நாளான 20-11-2012 வரை, பெயர் சேர்த்தலுக்கான படிவம் 6-இல் 23,37,934 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் இணையதளம் மூலம் பெறப்பட்ட 18,721 விண்ணப்பங்களும் அடங்கும். பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பங்கள் அதிகபட்ச அளவாக (1,64,630 விண்ணப்பங்கள்) காஞ்சிபுரம் மாவட்டத்திலும், குறைந்தபட்ச அளவாக (16,965 விண்ணப்பங்கள்) பெரம்பலூர் மாவட்டத்திலும் பெறப்பட்டுள்ளன.

மேலும், வெளிநாடுவாழ் வாக்காளர் பெயரைச் சேர்ப்பதற்கான படிவம் 6-ஹ-இல் 43 விண்ணப்பங்களும், பெயர் நீக்கலுக்கான படிவம் 7-இல் 2,38,617 விண்ணப்பங்களும், பதிவுகளைத் திருத்துவதற்கான படிவம் 8-இல் 2,66,225 விண்ணப்பங்களும், பெயரை இடம் மாற்றுவதற்கான படிவம் 8-ஹ-இல் 1,12,596 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் இருந்து பெறப்பட்ட அனைத்து படிவங்களையும் கணக்கில் கொண்டு கணினியில் பதிவு செய்யும் பணி நிறைவுறும்போது இந்த எண்ணிக்கையில் சிறு மாற்றம் இருக்கலாம். கணினியில் பதிவு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. கணினிப் பதிவு முடிவடைந்தபின்னர், களவிசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரிகளால் ஆணைகள் பிறப்பிக்கப்படும். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம், 2013-இன் இறுதி வாக்காளர் பட்டியல்கள் 10-01-2013 அன்று வெளியிடப்படும்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்