நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரகவளர்ச்சி அமைச்சர் நடத்திய மாநில அளவிலான வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

சனி, 11/24/2012 - 05:23 -- Reporter

சென்னை நவ 23:-

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரகவளர்ச்சி அமைச்சர் கே.பி.முனுசாமி அவர்கள் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சிப்பணிகள் ஆய்வுக்கூட்டம் சைதாப்பேட்டை ,பனகல் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், தாய் திட்டம், ஒருங்கிணைந்த மகளிர்களுக்கான சுகாதார வளாகங்கள் , ஒருங்கிணைந்த பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் , தன்னிரவு திட்டம், மற்றும் இதர திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Undefined
Topic: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்