வணிகர்கள் படிவங்களை வணிகவரித்துறையின் வலைதளத்தின் மூலம் மின்னணு முறையில் தாங்களே தயாரித்துக் கொள்ளும் வசதி அறிமுகம்

சனி, 11/24/2012 - 03:10 -- Reporter

சென்னை நவ. 23:-  இது குறித்து தமிழக அரசின் செய்தி வெளியீடு,

பதிவு பெற்ற வணிகர்கள் தங்களுக்கு தேவையான ‘C’ மற்றும் ‘F’ படிவங்களை வணிகவரித்துறையின் www.tnvat.gov.in என்ற வலைதளத்தின் மூலம் மின்னணு முறையில் தாங்களே தயாரித்துக் கொள்ளும் வசதி நவம்பர் 1, 2012 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியின் மூலம் வணிகர்கள் தங்களது மாதாந்திர நமூனாக்களை மின்னணு முறையில் சமர்ப்பித்தவுடன், அதற்குரிய ‘C’ மற்றும் ‘F’ படிவங்களை வலைதளத்தின் மூலம் தயாரித்துக் கொள்ள இயலும்.

இந்த வசதியின் மூலம் வணிகர்கள், வரிவிதிப்பு அலுவலகங்களுக்கு செல்லாமலேயே (இடைமாநில விற்பனை மற்றும் சரக்கு பரிமாற்றங்களுக்கு) தேவையான ‘C’ மற்றும் ‘F’ படிவங்களை வலைதளத்தின் மூலம் தயாரித்துக் கொள்ள முடியும். இந்த வசதியால், காலதாமதம் மற்றும் துறையுடனான வணிகர்களின் நேர்முக சந்திப்புகள் குறைவதால் வணிகர்கள் மிகவும் பயனடைவார்கள்.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்