சிக்கும் மாஜி அமைச்சர் ஆற்காடு வீராசாமி

வியா, 11/29/2012 - 03:44 -- Reporter

தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் தலைமை பொறியாளராகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றிய ஆர்.முருகன், 30.9.12ம் தேதி ஒய்வு பெறும் நிலையில் 28.9.12ம் தேதி அன்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.கடந்த திமுக ஆட்சியில்(2006-11) மின்சாரத்துறை அமைச்சராக ஆற்காடு வீராசாமி இருந்த போது, அமைச்சர் அறைக்கு முருகன் வருகிறார் என்றால் கடவுள் வருவது போல, அமைச்சரின் உதவியாளர் இளங்கோவன் ஆட்டம் போடுவார்.அறையில் எம்.எல்.ஏவாக இருந்தாலும், அனுமதிக்கமாட்டார்கள்.

இந்த அளவு செல்வாக்காக இருந்த முருகன், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதும், அதிர்ச்சியானார் மாஜி அமைச்சர் ஆற்காடுவீராசாமி. முருகன் மீது 2006-11 ஆட்சியில் நடந்த முறைகேடுகளில், பல முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்தாலும், முக்கிய ஊழல் கேபிள் கொள்முதல். Easun Products of India ltd  நிறுவனம் பூமிக்கு அடியில் கேபிள் பதிக்க, கேபிள் கொள்முதல் டெண்டரில் கலந்துக்கொண்டது. டெண்டரில் Easun Products of India ltd  நிறுவனத்துக்கு ஆதரவாக ஆர்.முருகன் செயல்பட்டார்.இதனால் மின்சாரவாரியத்திற்கு ரூ13.78 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.(ஆதார ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது)  மேலும் அந்த நிறுவனம் சப்ளை செய்த கேபிள் தரமற்றதாக  இருந்த காரணத்தால், அந்த கேபிள்களை மாற்றும் நிலைமை ஏற்பட்டது. அதனால் மின்சாரவாரியத்திற்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆர்.முருகன் 29.9.12ல்(எரிச்சக்தித்துறை ஆணை எண்.15) தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆர்.முருகன் உயர் அதிகாரிகள் விசாரணையின் போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தாலும், அப்போது அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி உத்தரவுபடிதான் செயல்பட்டேன். நான் என்ன செய்ய வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்று அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமியின் உதவியாளர் இளங்கோவன் சொல்படிதான் செயல்பட்டேன் என்று வாக்குமூலம் கொடுத்திருப்பதாக,மின்சாரவாரியத்தின் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இப்படி பல ஊழல் அதிகாரிகளை வைத்துக்கொண்டு, மின்சாரவாரியத்தின் விதிமுறைகளை குப்பைக்கூடையில் போட்டு தங்கள் விருப்பப்படி செயல்பட்டதால்தான், கடந்த திமுக ஆட்சியில் மின்சாரவாரியத்திற்கு ரூ50,000 கோடி கடன் ஏற்பட்டு திவாலானது. மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், எஸ்.ஆர்.எம் கல்வி அறக்கட்டளையின் சேர்மன் பச்சமுத்து உள்ளிட்ட பலருக்கு அரக்கோணம், தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் மின் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இவர்கள் மின் உற்பத்திக்கான நிலம் மட்டும் வாங்கினார்கள், மின்சார உற்பத்திக்கு அங்கு கட்டுமான பணி நடக்கவில்லை. இப்படி தனியார் மின் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கிய விவகாரங்களை ஆய்வு செய்தால், கடந்த திமுக ஆட்சியில் ஊழல் புற்று நோயாக மின்சாரவாரியத்தில் பரவியிருந்தது வெளிச்சத்துக்கு வரும்.தகவல்: மக்கள்செய்திமையம்

Undefined
Topic: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்