ஹாங்காங் தூயக் காற்றுக்கான ஆசிய மாநாடு 2012

செவ், 12/04/2012 - 01:36 -- Reporter

சென்னை டிச.3 :- பசுமைத்தாயகம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பு,

தூயக் காற்றுக்கான ஆசிய மாநாடு 2012 (Better Air Quality - BAQ Conference ) எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு டிசம்பர் 5,6,7 ஆகிய நாட்களில் ஹாங்காங் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள் தலைமையில் பசுமைத் தாயகம் அமைப்பினர் கலந்துகொள்கின்றனர்.தூயக் காற்றுக்கான ஆசியக் கூட்டமைப்பு (Clean Air Initiative for Asian Cities Centre ), ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி ஆகிய அமைப்புகள் தூயக் காற்றுக்கான ஆசிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளன. ஹாங்காங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்ட்டின் முழக்கமாக "வளரும் நகரங்கள், ஆரோக்கியமான நகரங்கள்" (Growing Cities Healthy Cities) எனும் வாசகம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் போக்குவரத்து, ஆற்றல், தொழில், காலநிலை மாற்றம் ஆகிய துறைகள் தொடர்பான முக்கிய மாநாடாக இது கருதப்படுகிறது. போக்குவரத்தினால் ஏற்படும் காற்று மாசுபாட்டினைக் கட்டுப்படுத்துவது இம்மாநாட்டின் முதன்மை நோக்கமாகும். இம்மாநாட்டில் சுமார் 800 சுற்றுச்சூழல் நிபுணர்கள், செயல்பாட்டாளர்கள் உலகம் முழுவதும் இருந்து பங்கேற்க உள்ளனர். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இம்மாநாடு இதற்கு முன்பு முறையே ஹாங்காங், பிலிப்பைன்ஸ், இந்தியாவில் ஆக்ரா, இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ஏழாவது மாநாடு இப்போது ஹாங்காங்கில் நடக்கிறது.ஆசிய நாடுகளின் நகரங்களில் நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப காற்று மாசுபாடும் அதிகரிக்கிறது. இத்தகைய மாசுபாட்டை தடுப்பது ஒரு உடனடித் தேவை ஆகும்.ஆசியாவின் 10 மாநகரங்களில் 7 மாநகரங்கள் மிகவும் மாசுபட்டவை, வாழத்தகுதியற்றவை என்கிற நிலை இப்போது உள்ளது.இவற்றில் சென்னையும் ஒன்றாகும். காற்று மாசுவால், புற்றுநோய், மாரடைப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் இந்நகரங்களில் பெருமளவு தாக்குகின்றது.

ஆசிய நகரங்களின் காற்று மாசுபாடு கட்டுப்படுத்தப்பட்டு வானம் மீண்டும் நீலநிறத்துக்கு மாற வேண்டுமெனில், மாசுக்காற்றைக் குறைக்கும் பொருளாதாரம், பசுமை கட்டடம், பொதுப்போக்குவரத்து, நடப்பதற்கும் மிதிவண்டிக்கும் ஏற்ற போக்குவரத்து முறை என மிகப்பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. இதனை வலியுறுத்தும் விதமாக ஹாங்காங் தூயக் காற்றுக்கான மாநாடு 2012 நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், காற்று மாசுபாடை தடுப்பதற்காகவும் பாடுபடும் அமைப்பு என்கிற அடிப்படையில் பசுமைத் தாயகம் அமைப்பிற்கு இம்மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் தலைவர் திருமதி சௌமியா அன்புமணி, செயலாளர் இர. அருள், துணை செயலாளர் சி.பெ. சத்திரிய சேகர், மாவட்ட அமைப்பாளர்கள் வ.ஆ.பத்மநாபன், குரோம்பேட்டை நா. கண்ணன், தி. அழகரசன், பா. வெங்கடாசலம் ஆகியோர் ஹாங்காங் தூயக் காற்றுக்கான மாநாடு 2012 இல் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவரும் இன்று இரவு சென்னையிலிருந்து வானூர்தி மூலம் ஹாங்காங் புறப்பட்டுச் செல்கின்றனர்.இம்மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் தமிழ்நாட்டின் நகரங்களிலும், குறிப்பாக சென்னையில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஹாங்காங் தூயக் காற்றுக்கான மாநாட்டு பங்கேற்பாளர்களுடன் பசுமைத்தாயகம் அமைப்பு ஆலோசனைகளில் ஈடுபடவுள்ளது.

Undefined
Topic: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்