அம்பேத்கர் சிலைக்கு அய்யா மரியாதை

வியா, 12/06/2012 - 18:37 -- Puthiyavan

இந்திய அரசியல் சாசன சிற்பி பாபா சாகேப் அம்பேத்கரின் 57ஆவது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி திண்டிவனத்தையடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திரு உருவச் சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பா.ம.க. இணைப் பொதுச்செயலாளர் இசக்கிப் படையாச்சி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.அதேபோல், திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப்படத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்ட தலைவர்களும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர்.தமிழ்

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்