கோவை மாவட்ட தொழில் நிர்வாகிகள் , தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலைமை குறித்து முதல்வருடன் ஆலோசனை

வெள், 12/07/2012 - 13:41 -- Puthiyavan

சென்னை டிச. 7:-

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை,கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், தென்னிந்திய ஆலைகள் சங்கம், தமிழ்நாடு காகிதம் மற்றும் அட்டை ஆலைகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று (7.12.2012) தலைமைச் செயலகத்தில் என்னை சந்தித்து தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்தார்கள்.

இந்தச் சந்திப்பின் போது, மாண்புமிகு தொழில் துறை அமைச்சர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர், நிதித் துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பின் போது, மின்னாக்கிகளின் (Gen Sets) மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைக்கவும், மாநில நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று மின்னாக்கிகளை தொழில் முனைவோர்கள் வாங்கும் போது அவர்கள் அளிக்க வேண்டிய பங்குத் தொகையை குறைக்கவும், தொழிற்சாலைகளில் மின்னாக்கிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு எரிபொருளாக தேவைப்படும் எரி உலை எண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றிற்கு மதிப்புக் கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கவும் கேட்டுக் கொண்டனர்.இக்கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்த நான், கீழ்க்காணும் சலுகைகளை உடனடியாக அளிக்க ஆணையிட்டுள்ளேன். இதன்படி,1. மின்னாக்கிகளின் (Gen sets) மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள 14.5. விழுக்காடு மதிப்புக் கூட்டு வரி, 5 விழுக்காடாக குறைக்கப்படும்.2. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மூலம் கடன் பெற்று மின்னாக்கிகள் வாங்கும் தொழில் முனைவோர்கள் தற்போது செலுத்த வேண்டிய 20 விழுக்காடு பங்குத் தொகை (Margin Money) 10 விழுக்காடாக குறைக்கப்படும்.3. தொழிற்சாலைகளால் மின்னாக்கிகளில் பயன்படுத்தப்படும் எரிஉலை எண்ணெய்க்கு (Furnace Oil) 1.2.2012 முதல் 30.9.2012 வரை மதிப்புக் கூட்டு வரியிலிருந்து ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வரிவிலக்கு 1.10.2012 முதல் முன்தேதியிட்டு 31.5.2013 வரை தொடர்ந்து அளிக்கப்படும். இதனால் அரசுக்கு 97 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், தொழில் முனைவோர்கள் மின்னாக்கிகள் மூலம் கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதன் மூலம் கூடுதல் உற்பத்தி மற்றும் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு ஏற்பட வழிவகை ஏற்படும். இவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்

தமிழ்
Topic: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்