குடும்ப அட்டை உள்தாள் ஒட்டுதல் - அமைச்சர் பார்வை

வியா, 01/03/2013 - 11:50 -- Erodekaaran

தமிழக முதல்வரின் ஆணையின்படி, தற்போது நடந்து கொண்டிருக்கும் குடும்ப அட்டை மேலும் ஒரு வருட காலத்திற்கு புதுபிக்கும் பணியினை உணவுத்துறை அமைச்சர் ர.காமராஜ் இன்று காலை பார்வையிட்டார். இப்பணி மாநிலம் முழுவதும் 01.01.2013 முதல் தொடங்கப்பட்டது. சுழற்சி முறையில் குறிப்பிட்ட தேதியில் அட்டைதாரர்கள் வர தவறினாலும் அவர்கள் வரும் தேதியில் புதுபிக்கும் பணியை செய்யலாம் என்று அமைச்சர் தெரிவித்தார். 

மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பொருள்களும் முன்னதாகவே வழங்கப்படவுள்ளது. இதற்கு போதுமான அளவு இருப்பு உள்ளதா என்பதையும் கோபாலபுரம் அங்காடியில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது அங்காடிக்கு வந்த அட்டைதாரர்களுக்கு உள்தாள் ஒட்டிய 

அட்டைகள் வழங்கபடுவதையும,பொருட்களின் தரத்தையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது அரசு செயலர், திருமதி ஆ.ஞ.நிர்மலா,இ.ஆ.ப., குடிமைப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர்  திரு.பி.எம்.பஷீர் அஹமது,இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் திரு.எம்.சந்திரசேகரன்,இ.ஆ.ப., முதுநிலை மண்டல மேலாளர்கள் திரு.பாஸ்கரன், திருமதி.ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்
Tags: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்