பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் 20-01-2013

சனி, 01/19/2013 - 15:05 -- Erodekaaran

பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் 20-1-2013 மற்றும் 24-2-2013 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ் நாட்டில் சுமார் 40,000 -க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள்/ அரசு மருத்துவமனைகள் / சத்துணவு மையங்கள்/ பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு  சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.  

முக்கிய அம்சங்கள்

1. சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.
 
2. அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் 20-1-2013 (ஞாயிற்றுக்கிழமை)  ஒரு தவணையும்  மீண்டும் 24-2-2013 (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம்  தவணையும் சொட்டு மருந்து  கொடுக்கப்பட வேண்டும்.
 
3. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். 
 
4. புதிதாக பிறந்த  குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு  மருந்து கொடுப்பது அவசியமாகும். 
 
5. சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படுகிறது.  இது விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவுகிறது.  
 
6. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
 
7. இலங்கை வாழ் அகதிகள் மற்றும்  இடம் பெயர்ந்து வாழ் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
  
பயணம் மேற்கொள்ளும் மற்றும் தொலைதூர பகுதி வாழ் குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடு:
 
பல்ஸ் போலியோ நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக  முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1013 நகரும் மையங்கள்  நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  771 நடமாடும்  குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு  போலியோ இல்லாத  9- வது ஆண்டில்  அடியெடுத்து வைக்கிறது.
தமிழ்
Tags: 

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்