எனக்கும் குழி தோண்ட எண்ணியவர்கள் நிலைத்து நின்றதுமில்லை; இனி நிலைக்கப் போவது மில்லை: கருணாநிதி

புத, 01/30/2013 - 14:30 -- Velayutham

சென்னை மாநகரில் காணப்படும் சுவரொட்டிகள் பற்றி தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறுகையில்

 
மாற்றார் பாசறையிலிருந்து முடுக்கி விடப்பட்டதன் விளைவே இந்தச் சுவரொட்டிகளும், சுவரொட்டி வாசகங்களுமாகும். இதற்கு என் மகன்கள் யாரும் காரணமாக இருக்க முடியாது என்று நான் நிச்சயமாகநம்புகிறேன்.வெங்கட் என்றும், ரமணா என்றும்பெயரிட்டுஅந்தச் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கின்ற “மாயமான்கள்”குறிப்பாகச் சொல்லவேண்டுமேயானால் “மாரீச மான்கள்” - சில கழக முன்னணியினருக்கு தாங்கள் தான் ஆதரவாளர்கள் என்பதாகக் காட்டிக் கொண்டு, அதன் மூலம்கழகத்தைப் பிளப்பதற்காக நடத்தப்பட்ட சதியின் துதுவர்களாக செயல்படுபவர்கள் யாராயினும் அவர்கள் மூக்கறுபட்டு போய் விடுவார்கள் என்றும்
 
என் தலைமையில் உள்ளகழகத்திற்கு மட்டுமல்ல; எனக்கும் குழி தோண்ட எண்ணியவர்கள் நிலைத்து நின்றதுமில்லை; இனி நிலைக்கப் போவது மில்லை. யார் அவர்கள் என்ற முழுஉண்மை முகிலைக் கிழித்து வெளிக் கிளம்பும் உதய கால சூரியனைப் போல வெளிப்பட்டே தீரும் என்று கூறினார்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்