பாஜக அரசுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை: முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர்

புத, 01/30/2013 - 19:30 -- Velayutham

பாஜக அரசுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை: முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர்

 
12 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருந்தாலும், பாஜக அரசுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றுமுதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் தெரிவித்தார்.
 
இது குறித்து பெங்களூர், விதானசௌதாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டுத்தொடர் பிப்.4-ம் தேதி தொடங்கவிருக்கிறது. 2013-14-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்.8-ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கிறேன். யாரோ ஒருவரின் அழுத்ததிற்கு அடிபணிந்து 12 பாஜக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். பாஜக ஆட்சி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. நல்லாட்சியை சீர்குலைக்கும் வகையில், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். இது சரியான நடவடிக்கை அல்ல.
 
12 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருந்தாலும், பாஜக அரசுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலம் உள்ளது. பாஜக அரசுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆளுநர் கேட்டுக்கொண்டால், சட்டப்பேரவையில் அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பேன் என்று கூறினார்

 

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்