குஜராத்தில் பஸ்-வேன் மோதல்: 23 பக்தர்கள் பலி

வியா, 01/31/2013 - 08:44 -- Velayutham

                                                                                            குஜராத் மாநிலம் படான் அருகே நேற்று நள்ளிரவு அருகில் உள்ள ஒரு தர்கா ஒன்றுக்கு அன்பர்களை ஏற்றிச் சென்ற ஒரு வேனும், குஜராத் மாநில அரசு போக்குவரத்து பஸ்ஸும் மோதிக் கொண்டதில், வேனில் பயணம் செய்த 23 பக்தர்கள் பலியாயினர். 18 பேர் காயம் அடைந்தனர்.

 
பலியானவர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்து போலீஸார் தெரிவித்தபோது, தர்காவுக்குச் சென்று வழிபாடு முடித்து விட்டு வந்த புனிதப் பயணிகளை அந்த வேன் ஏற்றிக் கொண்டு ஊர் திரும்பியபோது, அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதியது என்றனர். காயமடைந்தவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்