தமிழ்நாட்டில் பான் மசாலா, குட்கா பொருட்களில் வரி ஏய்ப்பு - வணிகர்களுக்கு வணிகவரித் துறை எச்சரிக்கை.

ஞாயி, 02/17/2013 - 19:55 -- Velayutham

 

 
 
 
புகையிலை சாந்த பொருட்களான பான் மசாலா, குட்கா, மெல்லும் புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களுக்கு 20 விழுக்காடு வரி கடந்த 12.07.2011 முதல் தமிழ்நாட்டில் விதிக்கப்பட்டு  வருகிறது.  தமிழ் நாட்டில் கடந்த 2011-12 நிதியாண்டில் பான் மசாலா, குட்கா போன்ற பொருட்களிலிருந்து ரூ.14.49 கோடியும், தற்போது     2012-13 நிதியாண்டில் (டிசம்பர் 2012 முடிய) ரூ27.63 கோடியும் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.  இருப்பினும் அதிக அளவில் நடைபெறும் வரி ஏய்ப்பினால் அரசுக்கு பல கோடிகள் வரி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
சமீப காலத்தில் வணிகவரித் துறை சார்ந்த அலுவலர்கள், இம்மாநிலத்தில் பான் மசாலா, குட்கா போன்ற பொருட்களில் வணிகம் செய்து வரும் பல வணிகர்களின் வியாபார இடங்களை திடீர்            ஆய்வு செய்தனர்.  மேலும், பல இடங்களில் வாகன தணிக்கை மற்றும் தணிக்கை சாவடிகள், சரக்கு அலுவலகங்கள், இரயில்வே சரக்கு மையங்கள், பேருந்து நிலையங்களிலும் தணிக்கை மேற்கொண்டதில் ரூ.6.86 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.00 கோடி வரி மற்றும் தண்டத்தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. 
தமிழக அரசு இந்த வணிகத்தில் வரி ஏய்ப்பினை தடுக்கும் பொருட்டு மொத்த விற்பனையாளர்களுக்கும் சில்லரை வணிகர்களுக்கும் விழிப்புணர்ச்சி உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  சில்லறை வணிகர்கள் இப்பொருளில் தாங்கள் வைத்திருக்கும் இருப்பிற்கேற்ப கொள்முதல் பட்டி வைத்திருக்க வேண்டும்.  மேலும் அரசு இதர துறைகளான சுகாதாரம்,  காவல்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் வருவாய் துறை ஆகியோரின் உதவியுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.  வியாபார இடங்களில் இருக்கும் பான் மசாலா மற்றும் குட்கா போன்ற பொருட்களுக்கு உரிய கொள்முதல் பட்டி இல்லை எனத் தெரிய நேர்ந்தால் பொருட்களை பற்றுதல் செய்வதுடன் அவ்வாறு சரக்கு வைத்திருக்கும் வணிகர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, பான் மசாலா மற்றும் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வியாபார பெருமக்களும் இப்பொருட்களை கொள்முதலோ, விற்பனையோ செய்யும்போது உரிய பட்டி வைத்திருத்தல் வேண்டுமென்றும், வரி ஏய்ப்பில் ஈடுபடக்கூடாது என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.  வணிகவரித் துறை இந்த நடைமுறையை 25.02.2013க்கு பிறகு அமல்படுத்த முடிவு செள்துள்ளது.  எனவே, இந்த பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து சில்லறை வணிகர்களும் தாங்கள் வைத்திருக்கும் பொருட்களுக்கு தகுந்த கொள்முதல் பட்டி வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழ்

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்